July 18, 2024

5 மாநில தேர்தல் முடிவு நான்கு மாநிலங்களில் பிஜேபி வெற்றி…! காங்கிரஸ் படுதோல்வி…! பகுஜன்சமாஜ் பார்ட்டி “ஃபில்டு அவுட்”, அகிலேஷ்யாதவ் ஆறுதல் வெற்றி

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் வாக்காளர்களின் எண்ணங்களையும் எண்ண ஒட்டங்களையும் கூர்ந்து கவனிக்கும் பொழுது பாஜக கட்சிக்கு ஆதரவு நிலையை ஒரே கோணத்தில் இருந்து மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி, ஆறுதல்களையும் தாண்டி உத்திரப்பிரதேசம், கோவா, சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் பாஜக கட்சி பெற்ற வெற்றி என்பது அந்த கட்சிக்கு மக்கள் ஆதரவு எந்த அளவில் இருந்து வருகிறது என்பதையும், நம்பகத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது. பாஜக கட்சிக்கு எதிராக பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் மதசார்பற்ற அணிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு பாஜக கட்சி எதிராக பல்வேறு கோணங்களில் வியூகங்கள் வகுத்து கூட்டணிகள் அமைத்து தனித்துப் போட்டியிடும் என்ற நிலையையும் எடுத்து தேர்தல் களத்தில் நின்றன. அத்தனை கட் சிகளின் வியூகங்களையும் உடைத்து மக்களின் ஆதரவைப் பெற்று அவர்கள் வாக்குகளையும், ஒருங்கிணைத்து மாபெரும் வெற்றியை தனித்து போட்டியிட்டு பாஜக கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. இதை பார்க்கும் பொழுது சு0சு4 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்னோட்டமாகவே 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக கட்சியின் தொண்டர்களுக்கும் கட்சியின் நிர்வாகிகளுக்கும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்துள்ளது.

சாதி வாக்குகளை நம்பி தேர்தல் களத்தில் கூட்டணி அமைத்த சமாஜ்வாஜ் பார்ட்டி தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு ஆட்சியை பிடிக்க முடியவில்லையென்றாலும் ஒரு மரியாதைக்குரிய வெற்றி பெற்றுள்ளதோடு உத்திரப்பிரதேச ஆட்சியில் எதிர்கட்சி தலைவர் வாய்ப்பையும் அகிலேஷ்யாதவ் பெற்றுள்ளார். செல்வி மாயாவதி பட்டியலின மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பட்டியல் இன மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என்று கூறிக்கொண்டு இயக்கம் நடத்தி வந்தாலும் கட்சியின் நிறுவனர் கன்சிராம் மறைவுக்குப் பிறகு பகுஜன்சமாஜ் கட்சி தனது செல்வாக்கை இழந்து வந்ததோடு தற்பொழுது வெற்றி வாய்ப்புகளையும் இழந்து இரண்டு தொகுதிகள் மட்டுமே வெற்றிப்பெற கூடிய ஒரு பரிதாபத்துக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முழு முதற் காரணமாக அமைந்தது உத்திரப்பிரதேச மாநிலத்தையும் தாண்டி பக்கத்து மாநிலங்களிலும் தனது செல்வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று மாயாவதி திட்டமிட்டது பெரும் தோல்விக்கு காரணமாகி விட்டது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு எழுந்து அந்த இயக்கத்தை எவ்வாறு வழிநடத்த வேண்டும் எந்த வகையில் தூக்கி நிறுத்த வேண்டும் என்கின்ற ஆலோசனையில் பகுஜன்சமாஜ் கட்சி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலை வந்துவிட்டது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தனது நட்சத்திர பிரச்சார பீரங்கியாக பிரியங்காகாந்தி அவர்களையும், கட்சியின் பொதுச்செயலாளராக்கி உ.பி. தேர்தல் பொறுப்பை ஒப்படைத்து கஜினி முகமது படையெடுப்பதை போல் பிரியங்கா பல திட்டங்களை தயார் செய்து பலமுறை உ.பி மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை இல்லங்களுக்கு நேரில் சென்று சந்தித்து உரையாடல் நடத்தியதும், தீவிர அரசியலில் ஈடுப்பட்டதும் உ.பி மத்தியில் எடுபடாமல் போய்விட்டது. பொதுமக்களின் நம்பிக்கையும் பெற முடியாமல் போய்விட்டது. அது மட்டும் அல்ல பல ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியை நடத்தியதோடு உத்திரப்பிரதேசத்திலும் ஆட்சியை நடத்திய காங்கிரஸ் கட்சிக்கு தற்பொழுது கிடைத்துள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகள் என்பதை பார்க்கும் பொழுது ஒன்று ராகுல்காந்தி மீது பரிதாபப்பட்டு போட்டதாகவும் இன்னொன்று பிரியங்காகாந்திக்கு ஆதரவாக வாக்கு அளித்ததாகவும் பார்க்கப்படுகிறது. ஆக உ.பி. தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவகையிலும் கை சின்னத்திற்கு கை கொடுக்காது என்பது உறுதியாகிறது. இந்த சரிவில் இருந்து இழப்பில் இருந்தும் காங்கிரஸ் கட்சி எழுந்து வரவேண்டும் என்று நினைப்பது இயலாத காரியமாகும். அது மட்டுமல்ல காந்தி குடும்பத்திற்கும் இது ஒரு சோகத்தை ஏற்படுத்தியதோடு மீளா துயரத்தை தேர்தல் முடிவு உருவாக்கியுள்ளது.

முதல்வர் யோகி ஆதித்தனார் தனக்கு எதிராக பல கோணங்களில் விமர்சனங்களும் எதிர்ப்பும் தொடர்ந்து எழுந்த நிலையில் குறிப்பாக விவசாயிகள் போராட்டம், விவசாயிகள் பேரணி மத்திய அமைச்சரின் மகன் விபத்தை ஏற்படுத்தியது, ரவுடிகள் அராஜகத்தை அடக்கியது, என்கவுண்டர் நடத்தியது, பெண்களுக்கு எதிரான களங்கங்கள் அவற்றை பெரிதுப்படுத்தியது, கங்கை நதியில் பிணங்கள் செத்து மிதப்பதாக விமர்சனம் செய்தது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரனா பெரும்தொற்று காலத்தில் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக போக்குவரத்து தடைசெய்யப்பட்ட காலகட்டங்களில் பல மையில் தூரங்கள் கால்நடையாக நடந்துச் சென்று பசி பட்டினியால், தூயரங்களுடன் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்றது போன்ற சம்பவங்களால் கடுமையாக எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்ட போதிலும் அவற்றையெல்லாம் புறம்தள்ளிவிட்டு அவற்றுக்கெல்லாம் செவி மடுக்காமல் முதல்வர் என்ற முறையில் யோகி ஆதித்தனார் எந்தவித சமர்சரத்திற்கும் இடம் கொடுக்காமல் தனது கடமையை முழுமையாக நிறைவேற்றி தான் அடையவேண்டிய இலக்கை அடைவதற்கு ஏற்ற வகையில் அரசியல் வியூகங்களையும் யுக்திகளையும் வகுத்து சிறந்த முறையில் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியை வழிநடத்தி வந்தார் என்பதற்கு அடையாளமாக கடந்த காலத்தில் அடைந்த வெற்றியை விட 60 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான சு0சு தொகுதிகளை தாண்டி 50&க்கும் அதிகமான இடங்களில் வெற்றிப்பெற்று மொத்தத்தில் அதற்கு மேல் வெற்றிப்பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்திருப்பது கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக கட்சி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களுடைய ஆதரவுடன் மீண்டும் யோகி ஆதித்தனார் ஆட்சி என்பது உ.பி. அமைந்துள்ளது உ.பி. வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆக கடந்த 5 மாநில தேர்தல் முடிவு என்பது மக்களின் மனோநிலையையும் வாக்களிக்கும் ஆர்வத்தையும், எந்த கட்சிக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்ற தெளிவான முடிவையும் உறுதியோடு நின்று முடிவெடுத்து வாக்களித்திருப்பது பாஜக கட்சியின் எதிர்கால அரசியல் திட்டத்திற்கு சு0சு4 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கும் அச்சாரமாக அமைந்துள்ளது என்றே கூறவேண்டும்.

– டெல்லிகுருஜி