டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்து வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் கற்பித்தல் பணி மேற்கொள்ளாத ஆசிரியர்கள் விருது பெற தகுதியானவர்கள் இல்லை. 5 ஆண்டு கல்வி பணியில் எவ்வித புகாருக்கும் இடம் தராமல் ஈடுபட்டுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
உலகின் இளம் வயது ஆடிட்டர் நந்தினி அகர்வால் – கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்:
சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்
ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணை கப்பலை வியட்நாமுக்கு பரிசளித்த இந்தியா