October 11, 2024

அரசு பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

கடப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி வகுப்பறைகளுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவர்களிடம் குறைகளை கேட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார்.

காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்ற அவர் கடப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளிக்கு திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளி வகுப்பு அறைகளுக்கு சென்று மாணவ-மாணவர்களிடம் குறைகளை கேட்டார். அவர்களுக்கு தயார் செய்யப்படும் மதிய உணவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆசிரியர்களிடம் விவரங்களை கேட்டறிந்த அவர் பள்ளி வளாகத்தையும் சுற்றி பார்த்தார்.