April 25, 2024

புதுச்சேரி மாநிலத்தில் காற்றில் பறந்தவாக்குறுதிகள்!

[responsivevoice_button voice=”Tamil Male”]புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்கு

2016 தேர்தல் அறிக்கை ஞாபகம் இருக்கா…???

மே 13-2016 அன்று புதுவை காங்கிரஸ்தேர்தல் அறிக்கை:30 கிலோ இலவச அரிசி, மின் கட்டணம் பாதியாக குறைப்பு!

புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

முன்னாள் மத்திய மந்திரியும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளருமான நாராயண-சாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் முதல் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அதில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • ஏழை மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் ரத்து செய்யப்படும்.
  • மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடாக 50 சதவீத இடங்கள் பெறப்படும்.
  • தனியார் பள்ளி கட்டணங்கள் முறைப்-படுத்தப்—படும்.
  • புதுவை அரசு பொது மருத்துவமனை சூப்பர் பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.
  • நவீன தொழில்நுட்ப முறையில் உயர்தர மருத்துவ வசதி இலவசமாக வழங்கப்படும்.
  • என்.ஆர்.எச். மூலம் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
  • 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை மாஸ்டர் மருத்துவ பரிசோதனை இலவசமாக செய்யப்படும்.
  • விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும். விவசாய வாரியம் அமைக்கப்படும்.
  • கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாகவும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
  • 30 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும்.
  • எண்ணை, பருப்பு போன்ற அத்தியாவசிய மளிகை பொருட்கள் ரேசன் கடைகளில் வழங்கப்படும்.
  • குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். அதற்காக சட்டம் கொண்டு வரப்படும்.
  • காங்கிரஸ் ஆட்சி அமைத்த முதல் ஆண்டி-லேயே 50 ஏக்கர் நிலத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
  • தனியார் வேலை வாய்ப்பு, சுய வேலைவாய்ப்பு மூலம் 5 ஆண்டுகளில் பு லட்சம் இளைஞர்-களுக்கு வேலை வழங்கப்படும்.
  • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். இந்த திட்டம் நகரப்பகுதிகளிலும் செயல்படும்.
  • 1 லட்சம் பெண்களுக்கு தொகுதிக்கு 3 ஆயிரம் பேர் வீதம் ரூ.5 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
  • போலீசார் பஞ்சப்படி உயர்த்தப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு போலீஸ் நிலையம் அமைக்கப்படும்.
  • போலீஸ் கோரிக்கைகளை நிறைவேற்ற தனி யாக ஒரு நபர் குழு அமைக்கப்படும்.
  • சமூக விரோதிகள், ரவுடிகள் ராஜ்யத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும். இதற்காக குண்டர் சட்டம் அமல் படுத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு ஒற்றை முறை ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
  • ஆசிரியர் பணி காலியிடங்கள் நிரப்பப்படும்.
  • ரொட்டி-பால் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்.
  • அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும்.
  • முதியோர் உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரமாக வழங்கப்படும். உடல் ஊனமுற்றோருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
  • தியாகிகள் பென்சன் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.
  • விளையாட்டு நலவாரியம் அமைக்கப்படும்.
  • நாட்டுப்புற கலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மின்சார கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்படும். மின் கட்டணம் முறைப்படுத்தப்படும். மேலும் 15 மின்கட்டண வசூல் மையம் அமைக்கப்படும்.
  • அனைத்து மக்களுக்கும் இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (ஆர்.ஓ. வாட்டர்) வழங்கப்படும்.
  • நகரப்பகுதியில் மலிவு விலை அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படும். வீடுகட்ட வாங்கிய கடன்களுக்கு, வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
  • மூடி கிடக்கும் தொழிற்சாலைகள் உடனடியாக திறக்கப்படும்.
  • தனியார் உற்பத்தி செய்யும் பொருட்கள் புதுவையில் விற்கப்பட்டால் 50 சதவீத விற்பனை வரி தள்ளுபடி செய்யப்படும்.
  • எலக்ட்ரானிக்ஸ் சந்தை நிறுவப்படும்.
  • வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி புதுவையில் தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். புதிய தொழிற் கொள்கை உருவாக்கப்படும்.
  • புதுவை பழைய ஜெயில் வளாகத்தில் நவீன அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டப்படும்.
  • 100 அடி சாலை சிவாஜி சிலையில் இருந்து மரப்பாலம் வரை மேம்பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
  • உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
  • அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்படும்.
  • மீனவர்கள் மழைக்கால நிதி ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும். விடுபட்ட அனைவருக்கும் சுனாமி வீடு கட்டித்தரப்படும்.
  • மீனவர்கள் கடலில் விழுந்து இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவி தொகை வழங்கப்படும்.
  • மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.6 ஆயிரமாக வழங்கப்படும்.
  • பிற்படுத்தப்பட்டோர் நலவாரியம், சிறுபான்மையினர் நலவாரியம் அமைக்கப்-படும்.
  • ஏ.எப்.டி.ஆலை, காரைக்கால் நூற்பு ஆலை உடனடியாக திறக்கப்படும். ஆதிதிராவிடர் வீடு கட்டும் மானியம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். விலைவாசி கட்டுப்படுத்தப்படும்.
  • ஒரே மாதிரி டி.வி. கட்டணம் நிர்ணயிக்கப்படும். இலவச செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படும்.
  • மத்திய அரசின் கடன் முழுவதும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தப்படும்.
  • நகர-கிராமப்பகுதிகளில் ரூ. 7 ஆயிரம் சம்பளத்தில் கிராம நல பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.- குமார்