April 25, 2024

திராவிட தலைவர்களும்

திராத இலங்கை தமிழர் பிரச்னைகளும்! திர்வு வருமா?

தமிழ்மொழியைச் சொல்லி தமிழனின் வளர்ச்சியை தடுத்து தங்களை தனவந்தர்களாகவும், தலைவர்களாகவும் வளர்த்துக் கொண்டவர்கள் தான் திராவிடத் தலைவர்கள் என்று சொல்லும் பெரிய மனிதர்கள், தங்கள் ஏமாறுவதையே உணராமல் பொய்யர்களின் புகழ்வரை கேட்டு, கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் கைரேகையே தேய்ந்து போன பிறகும், ஏமாற்றியவர்கள் புகழ்பாடி, தமிழ்மொழியையும் தமிழனின் வளர்ச்சியையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, பதவி சுகம்தேடி அலைந்து முதுமையிலும் அரசியல் நடத்தும், தமிழா நீ எப்பொழுது உண்மை உணர்ந்து ஏமாற்றப்பட்டோம் என்பதை தெரிந்து, விழித்துக் கொண்டு தமிழ்மொழியையும், தமிழ் இனத்தையும் வாழவைக்கப் போகிறாய் தமிழா…?

இது மட்டுமா? இலங்கையில் எண்ணற்ற தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவித்தபோது போரை தடுத்து நிறுத்தவேண்டிய இடத்தில் அமர்ந்திருந்த திராவிடத் தமிழர்களும் உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்று முழங்கிய அதிபுத்திசாலிகளும் பீரங்கி தாக்குதலை தடுக்காமல் எங்கே போனார்கள்? திராவிடர் தலைவர், தமிழர் தலைவர் முத்தமிழ் அறிஞர் என்றெல்லாம் தமிழர்களால் புகழ்பாடிய தலைவர்கள் ஏன் இலங்கை தமிழர் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தி தமிழன் பெருமையை உலகறியச் செய்து, தனிஈழம் என்ற நெருப்பு அணையாமல் பாதுகாக்க இயலாமல் போனார்கள்?

தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் கோத்தபைய ராஜபக்சேவுடன், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் சென்று அதிபருடன் கைகுலுக்கி விருந்து சாப்பிட்டு சிரித்து மகிழ்ந்தது ஏன்? தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை பயணத்தை தவிர்த்திருக்கலாமே ஏன் செய்யவில்லை. இதுதான் இலங்கை தமிழர்கள் எழுப்புகின்ற தன்மான உணர்வுள்ள கேள்வி?

திராவிடத் தலைவர்கள் இந்த படுகொலைக்கு பிராயசித்தம் எப்பொழுது செய்யப்போகிறீர்கள்? தொப்புள் கொடி உறவு என்ன செய்துக் கொண்டிருக்கிறது?

உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதெல்லாம், வெறும் சினிமா அரசியல் வசம் மட்டுமா? தமிழன் வாழ்ந்தால் விட்டுக் கொடு? தமிழன் வீழ்ந்தால் முட்டுக்கொடு என்று கூறுவதும் திரைக்கதை, வசனம் மேடைப் பேச்சு மட்டும் தானா. ?

வீழ்வது நாமா இருக்கட்டும் வாழ்வது தமிழக இருக்கட்டும் என்பதும், வெத்து முழக்கம் மட்டுமா…? இலங்கை தமிழர் வாழ்விலும் ஈழப்பிரச்சனையிலும், ஒரு நிரந்தர ர்வு காணவேண்டும் என்று நினைப்பது எத்தனை

பேர், திராவிடத் தலைவர்கள் தமிழ்இனத் தலைவர்கள் என்று கூறிக்கொண்டிருக்கிறவர்கள் மத்திய அரசை அணுகி, பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறையை நாடிச் சென்று அழுத்தம் தந்து இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரை, தடுத்து நிறுத்திட முயற்சிகள்கள் எடுத் ர்களா? குறைந்தபட்சம் சில நாட்கள் மட்டும் போர் நிறுத்தம் செய்ய மத்திய காங்கிரஸ் அரசை வலியுறுத்தி பிரபாகரன் உள்பட இலங்கை அப்பாவி தமிழர்களை காப்பாற்றிட சிறிய அளவு முயற்சியையாவது எடுக்க தவறியது ஏன்?

திராவிடம் என்பது மாயை தமிழ், தமிழன் என்று கூறுவதும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் தமிழ் மொழியின் மீதும் தங்களுக்கு மட்டுமே பற்றும் பாசமும் இருப்பதுபோல் வீர முழக்கம் செய்வது வெற்று வேஷம் கானல் நீர்? இதை புரிந்துக் கொண்டால் தமிழ்வாழும் தமிழர்கள் வாழ்வார்கள். தமிழ்நாடு வளம் பெரும். தமிழன் வாழ்வு உயரும் அவன் வாழ்வும் வளர்ச்சியடையும் தேசியமும் தெய்வீகமும் நமது இரு விழிகள் என்று கூறிய பசும்பொன் தியாகி ஐய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் ஆன்மா தமிழர்களின் தவறுகளை மன்னித்து அருள்புரியும் தமிழ் தமிழர் புகழ்க்கொடி உயரத்தில் பறக்கும்.

தமிழ் தேசியம், தேசிய நீரோட்டம் மூலம் இலங்கை தமிழர் வாழ்வில் ஏற்பட்டுள்ள இன்னல்களையும் இழந்த உடைமைகளையும் பெறுவதற்கு ஏற்றதொரு புதிய பாதையை உருவாக்கி அதில் இலங்கை தமிழர்கள் பயணிப்போம்.

திராவிடமா? தேசியமா? தமிழ் இனமா? தமிழர்களே யோசியுங்கள் ஈழம் மலரும். இலங்கை தமிழர் இழந்துவிட்ட வாழ்வும் மீண்டும் மலரும் இதற்கு இந்திய அரசின் ஆதரவும் அரசியல் அணுகுமுறையும் மிகமிக அவசியம். தமிழ்நாட்டில் சு0சுபு ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் மூலம் தமிழர்கள் நல்ல ர்ப்பை வழங்க வேண்டும். சாதி, மதம், மொழி, இனம் என்ற பாகுபாடு இன்றி தமிழர்கள் ஒன்றிணைந்து நூறு சதவீதம் தங்கள் ஜனநாயகக் கடமைகளை தவறாமல் செய்யவேண்டும். அதன் மூலம் இலங்கை தமிழர் வாழ்வுக்கு விடியல் பிறக்கலாம்.

வந்தாரை வாழவைத்த தமிழா நீ தமிழர்களையும், தமிழ் மொழியையும் வாழவிடு…? இனியாவது இலங்கை தமிழர்கள் வன்னிக் காட்டில் இடம் அமர்ந்து வாழட்டும், புலம் பெயர்ந்த தமிழர்கள் நெஞ்சம் வாழ்த்தட்டும். சுயமரியாதை திராவிடர் தலைவர்கள் செய்ய மறந்ததை தமிழ் தேசியத் நல் உள்ளங்கள் மூலம் வென்று காட்டுவோம்.

இதற்காக தமிழ்நாட்டு தமிழன் தனது நிஜ அடையாளத்தைக் காட்டிட வேண்டும் ஒரு சீமான் போதாது, ஒரு வேல்முருகன் போதாது, ஆயிரம் ஆயிரம் காசி ஆனந்தகன் தேவைப்படுகின்றது. தமிழ்மொழியின் அடையாளத்தையும், தமிழர் இழந்து விட்ட பூமியை மீட்பதற்கும் தமிழ் வாழ்வதற்கும்.

தவறு எங்கே! நடந்தது!! சிந்திப்போம்!!!