April 25, 2024

தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம் எப்பொழுது?

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் நியமனம் என்பது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஒரு செயல். அதன் அடிப்படையில் சு ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகள் ஒரு முறை காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம் கட்டாயம் அகில இந்திய காங்கிரஸ் அறிவிக்கும். தொடர்ந்து நியமனங்கள் மூலமே தலைவர்களை தேர்வு செய்யும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை கே.எஸ்.அழகிரி அவர்களை கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நியமனம் செய்தது.

தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக ஆதரவுடன் போட்டியிட்டு 100% வெற்றியும் பெற்றது. இதற்கிடையில் அழகிரிக்கு செக் வைக்கும் விதமாக நான்கு பேர் கொண்ட செயல் தலைவர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமனம் செய்தது. செயல் தலைவரின் ஒருவரும் கன்னியாகுமாரி நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் உடல் நலம் குறைவால் சமீபத்தில் காலமாகி விட்டார். மீதம் உள்ள மூன்று செயல் தலைவர்களும் தமிழக காங்கிரஸ் கட்சியில் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விதமான புகார்களை கேட்டறிந்து அகில இந்திய தலைமைக்கு தமிழக தலைமையின் செயல்பாடுகள் குறித்து புகார் அளித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்ட தலைவர்களும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக புகார்களை வாசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தோழமை கட்சிகள் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் காரசாரமாக பேட்டியளித்தார் அழகிரி. உடனடியாக டெல்லிக்கு வரவழைத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சோனியாகாந்தி அவர்கள் எக்காரணம் கொண்டும் திமுகவுடன் வெறுப்பு அரசியலை நடத்த வேண்டாம். திமுகவுடன் இணக்கமான சூழ்நிலையை கடைபிடியுங்கள் என்று எச்சரித்து அனுப்பி வைத்துள்ளது. மேலிட கட்டளையை ஏற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து மேலிட உத்தரவை எடுத்துக் கூறிய அழகிரி அவர்கள் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தமிழகம் மேலிடப்பொறுப்பாளராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தினேஷ்குண்டுராவ் அவர்களை அகில இந்திய காங்கிரஸ் நியமனம் செய்தது. அவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பதை உறுதி செய்துள்ளார். ஆக வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை உறுதியாகி உள்ளது. இதனால் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களை மாற்ற வேண்டுமென்ற குரல் மிக பெரிய அளவில் புகாராக எழுந்துள்ளது. வெகு விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரை நியமனம் செய்யும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள். இளைஞர் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கையும் ராகுல்காந்தி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புதிய தலைவர் நியமனம் எப்பொழுது என்ற கேள்வி தமிாக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் ஆழமான விவாதிக்கப்பட்டு வருகிறது.