April 16, 2024

ஒரே வேலை இருவேறு சம்பளங்கள்! இந்த கொடுமையை களைந்து ஆசிரியர்களை வாழ்விக்க அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும்! கேரளா அரசு வழிகாட்டுகிறது…!

ஒரே கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் ஒரே அளவு பணி சுமையை ஏற்பார்கள். ஆனால் எல்லோருக்கும் பணி பாதுகாப்பு, பணி நிபந்தனைகள், ஊதியம் எல்லாம் முற்றிலும் ஒன்றாக இருக்கும். இந்த நிலை புதிய தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைக்கு வந்த 40 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி இன்று ஒரே ஊதியம் இல்லை ஒரேமாதிரி பணி பாதுகாப்பும் இல்லை என்றாகி விட்டது. நம் நாட்டில் நம் மாநிலத்தில் தொடரும் இந்த கொடுமை குறித்து பலமுறை பொதுமக்கள் பார்வைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவருக்கு பெயர் நிரந்தர ஆசிரியர். அவர் ஹிசிநி ஊதியம் பெறுவர். மற்றவர் தற்காலிக ஆசிரியர். அரசு கல்லூரிகளில் இவர்களின் வருகை பேராசிரியர்கள் அல்லது சிறப்பு ஆசிரியர்கள் எனப்படுபவர். இந்த தற்காலிக ஆசிரியர்களின் ஊதியம் நிரந்தர ஆசிரியர்களை காட்டிலும் பல மடங்கு குறைவாக இருக்கும். ஆமாம் ஒரே வேலை செய்யும் இந்த இருவருக்கும் இப்படி வெவ்வேறு ஊதியங்கள். அதுமட்டும் அல்ல ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி இறுதியில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு பின் கல்லூரி தொடங்கி சில வாரங்களுக்கு பின்னரே மீண்டும் அவர்களுக்கு பணி ஆணை அளிக்கப்படும். இடையில் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவர் பிடிக்காமல் போயிருந்தால் அவருக்கு மறுபடியும் வேலை இல்லாமல் போய்விடும்.

இப்படி தனியார் மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் பணி நீக்கம் செய்யப்படும் நிலை இல்லாவிட்டாலும் பிறர் நிரந்தர ஆசிரியர்களுக்கும் இவர்களுக்குமான ஊதிய வேறுபாடுகள் ஏராளம். ஊதிய உயர்வு முதலான பாதுகாப்புகளுக்கான எந்த ஒழுங்கு முறைகளும் இங்கு கிடையாது. உரிய மரியாதையும் இவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. முதல்வர் முன் உட்கார கூட இவர்களுக்கு அனுமதியில்லை.

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இப்படி ஒரு ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்ட பொழுது சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று அவர் முதல்வர் முன் நாற்காலியில் உட்கார்ந்தார் என்றும் பெருந்தொற்று காலத்தில் இப்படியான தனியார் கல்லூரிகளில் சுயநிதி துறை ஆசிரியர் பலருக்கு வழங்கப்பட்டு வந்த குறைந்த ஊதியமும் குறைக்கப்பட்டது. பலர் வேலையிழந்த வரலாறுகள் உண்டு. இப்பொழுதுதெல்லாம் அரசு கல்லூரிகள் புதிதாக திறப்பது கிடையாது. இருக்கும் அரசு கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் புதிய வகுப்புகள் முதலானவை இப்படியான எந்த உரிமையும் இல்லாத நிரந்தர ஆசிரியர்களின் ஊதியத்தை காட்டிலும் குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்களாகவே ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மொத்த ஆசிரியர்களின் 30 அல்லது 40 சதவிகித ஆசிரியர்களே பல்கலை கழக மானியக் குழு (ஹிநிசி) நிர்ணயித்துள்ள முழு ஊதியம் பெறுபவர்கள். இப்படி அரசு கல்லூரி ஆனாலும் தனியார் கல்லூரி ஆனாலும் ஹிநிசி ஊதியம் பெறும் நிரந்தர ஆசிரியர்கள் எனவும் இவர்களை காட்டிலும் பல மடங்கு குறைவாக ஊதியம் பெறும் தற்காலிகமாக சுயநிதித்துறை ஆசிரியர்கள் எனவும் இரண்டு வர்க்கங்கள் சாதிகள், கல்லூரிகளில் உண்டு. ஒரே பணிக்கு இருவேறு ஊதியங்கள் மற்றும் பணி நிபந்தனைகள் கூடாது என்று சொல்லி வருகிறோம்.

ஆனால் அரசுக்கு எதுவாக இருந்தாலும் இதை கண்டுகொள்வதில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் இது தான் நிலை. எதையும் தற்பொழுது ஒப்பிட்டு அளவில் ஒரு முக்கிய மாற்றத்தை பக்கத்து மாநிலமான கேரள அரசு செய்துள்ளது. நில வாரங்களுக்கு முன் ஆணையிட்டுள்ள அரசு ஆணையின் மூலம் (ரிமீக்ஷீணீறீணீ ஷிமீறீயீ திவீஸீணீஸீநீவீஸீரீ சிஷீறீறீமீரீமீ ஜிமீணீநீலீவீஸீரீ ணீஸீபீ ழிஷீஸீ-ஜிமீணீநீலீவீஸீரீ ணினீஜீறீஷீஹ்மீமீs கிஜீஜீஷீவீஸீtனீமீஸீt ணீஸீபீ சிஷீஸீபீவீtவீஷீஸீs ணீஸீபீ ஷிமீக்ஷீஸ்வீநீமீ ஙிவீறீறீ சு0சுபு) ஒரு முக்கிய வரவேற்கதக்க மாற்றம் அங்கு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் முழுமையான மாற்றாக இல்லை. முதலில் கேரளா அரசு செய்துள்ள மாற்றத்தில் வரவேற்கதக்க அம்சங்களை பார்ப்போம்.

இந்த புதிய அரசாணையின் மூலம் சுயநிதி துறையில் பணியாற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லா பணியாளர்கள் ஆகியோரின் பணி பாதுகாப்பை கேரளா அரசு பெரிய அளவில் உறுதி செய்துள்ளது. அதே போல் இந்த தற்காலிக ஆசிரியர்களை நிர்வாகம் நினைத்தால் இனி எளிதில் பணி நீக்கம் செய்யமுடியாது.

இதர விடுமுறை முதலான அம்சங்களில் நிரந்தர ஆசிரியர்களுக்கும் தற்காலிக ஆசிரியர்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இருக்க கூடாது என்பது இந்த ஆணையின் இன்னொரு வரவேற்கத்தக்க அம்சம். கேரள மாநில கல்வி அமைச்சர் ஆர்.பிந்து அவர்களின் வழிகாட்டலின் இந்த நகல் ஆணை உருவாக்கப்பட்டு கல்வி துறையின் சப்ஜெக்ட் கமிட்டியின் ஒப்புதலுடன் தற்போது கேரளா சட்டமன்றத்தில் ஏகமனதாக இது நிறைவேற்றப்பட்டுள்ளது. நியமிக்கப்படும் ஆசிரியர்கள் மட்டுமின்றி இவர்களை பணி அமர்த்தும் கல்லூரி நிறுவனமும் இப்படியான ஊதியம், பணி நிபந்தனைக் உள்ளானதில் கையெழுத்து இட வேண்டும் என்று ஆணையில் கூறப்பட்டுள்ளது.

ஹிநிசி எத்தனை தகுதி நிபந்தனைகளை இட்டுள்ளதோ அவற்றை இந்த புதிய சட்டம் எல்லோருக்கும் கட்டாயமாக்குகின்றது. நிர்வாகங்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது ஏதேனும் ஒழுங்குமுறை நடைவடிக்கை முறைகளை மேற்கொண்டால் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் அவர்கள் பணியாற்றும் பல்கலைகழகங்கள் மேல்முறையீடு செய்யவும் சட்டத்தில் வழி அமைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவு பணி பாதுகாப்பு சம ஊதிய உரிமை முதலிய இதன் மூலம் இந்த தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இப்புதிய சட்டத்தின் மூலம் கிடைத்தது முக்கியமான ஒன்று. இன்னும் கூட இந்த அம்சங்களில் குறைபாடு இருப்பின் அவற்றை கலைய கால ஒட்டத்தில் நாம் நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இப்படியான பாதுகாப்புகள் ஏதும் இல்லாத சூழ்நிலையில் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் சமீப காலங்களில் இப்படியான ஊழியர்களைப் படுத்தும் கொடுமைகள் இன்று ஏராளம். பணி நிரந்தரம் இன்றி எந்த நிமிடமும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி பணி நீக்கம் செய்யமுடியும் என்ற நிலையில் ஆசிரியர்கள் எப்படி நிம்மதியாக பணியாற்ற முடியும். அப்படியான கல்லூரிகளில் கல்வி தரம் எப்படி சிறப்பாக அமைய முடியும். தமிழகத்தில் இன்று இப்படி கொரனா லாக்அவுட் உள்பட பல காரணங்களை சொல்லி பணி நியமனம் தமிழக அரசு கேரளா அரசை பின்பற்றி ஒரு குழு அமைத்து இப்படியான பணி பாதுகாப்பு சட்டம் ஒன்றை தமிழ்நாட்டிலும் நிறைவேற்றினால் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் வரவேற்பார்கள், மகிழ்ச்சியடைவார்கள். கேரள அரசின் இந்த திருத்தங்கள் வரவேற்க தக்கவை ஆனாலும் அதே நேரம் இன்னும் ஒரு பெரும் கொடுமை இந்த கேரளா சட்டத்தாலும் நீக்கப்படவில்லை என்பதை நாம் காணாமல் இருந்துவிடக் கூடாது.

ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் என்ற பணி அறம் குறித்து கேரளா அரசின் இந்த ஆணை மௌனம் சாதிக்கிறது. ஒரு ஹிநிசி ஊதியம் நிரந்தர ஆசிரியர் இன்று மாதம் ஒரு லட்சம் ஊதியம் பெறுகிறார் என்றால் இந்த தற்காலிக ஆசிரியர்கள் தமிழகத்தை பொறுத்த மட்டில் சுமார் 30 முதல் 40 ஆயிரத்திற்குள் தான் ஊதியம் பெறுகிறார்கள். கேரளத்தை ஊதியத்தை பொறுத்தமட்டிலும் சில நிபந்தனைகள் இருந்தாலும் தற்காலிக ஆசிரியர்களுக்கும், நிரந்தர ஆசிரியர்களுக்கும் இப்படி ஊதிய வேறு கூடாது என ஆணை ஏதும் இல்லை. ஊதிய வேறுபாடு குறித்து ஒன்றும் சொல்லப்படவில்லை. ஒரே பணிக்கு இரண்டு விதமான ஊதியம் என்பது எப்படி நியாயமாகும். மிக அடிப்படையான இந்த அநீதி எல்லாம் கால மயமாக்கல் மூலம் நம்மீது திணித்துள்ள பெரும் கொடுமைகளில் ஒன்று. இந்த வேறுபாடு கலையப்பட வேண்டும் இருந்தாலும் சுயநிதி அடிப்படையில் பணியில் சேர்க்கப்படும் கல்லூரி ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் பணி பாதுகாப்புகள் தொடர்பாக கேரளா அரசு ஏற்றுள்ள புதிய நெறிமுறை சட்டத்தை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

-பேராசிரியர் மார்க் அந்தோணிசாமி

பாக்ஸ்
தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள் ஏராளமாக தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் கல்லூரிகளில் நிரம்பி வழிந்த காலங்கள் போய் மறைந்து பல கல்லூரிகள் மாணவர் வருகை இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி கல்லூரிகளை இழுத்து மூடும் அளவிற்கு பல வகையிலும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அதே நேரம் பல்கலை கழக மானியக் குழு வழிகாட்டுதலின் படி ஆசிரியர் சேர்க்கை கட்டிட வரைமுறைப்படுத்தாமல் இருப்பது போதிய அளவிற்கு ஆசிரியர் பற்றாக்குறை தேவையான அளவிற்கு ஊதியம் வழங்காத குறைப்பாடுகள் நிறைந்துள்ளனர். இதனால் பல கல்லூரிகளை மூட வேண்டிய அபாயத்திற்கு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் கலை அறிவியல் கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைகளையும் மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு முழு தகுதியுள்ள கல்லூரிகளுக்கும் மட்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கி ஆசிரியர்களையும் கல்லூரி நிர்வாகத்தையும் ஊக்கப்படுத்துவதோடு தரமற்ற கல்லூரிகளை மூடுவதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும். அல்லது புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.