March 19, 2024

எங்கே போகிறது தேசம்…?

[responsivevoice_button voice=”Tamil Male”]இந்திய நாடு இன்று இருப்பது போல் இதுவரையில் இருந்ததில்லை. எந்த நிலையிலும் ஒருவிதமான மந்த நிலையே நிலவுகிறது. குறிப்பாக தொழில் வளர்ச்சி, பொருளாதார தேக்கம், வேலையின்மை, வாங்கும் சக்தி குறைந்து வருவது, ஊழல் போன்றவற்றால் நம்நாடு ஒருவிதமான கீழ்நிலைக்கு போய்க்கொண்டு இருக்கிறது. நாட்டை ஆள்பவர்கள் இத்தகைய நிலையை உற்றுநோக்கி, அரசு இயந்திரங்களை தெளிவற்ற நிலையில் மக்கள்
எங்கே போகிறது தேசம்

முடுக்கிவிட்டு, பிரச்னைகளுக்கும் தேக்க நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதன் மூலம் மட்டுமே நாடும் நாட்டு மக்களும் சுதந்திரமாக செயல்பட இயலும். நாடும் முன்னேறும், நாமும் முன்னேறுவோம்! மத்திய மாநில அரசுகள் மக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில்தான் முனைப்பு காட்டவேண்டும். குறிப்பாக முத்தாய்ப்பான திட்டங்கள் வகுத்து செயல்படுத்துவதன் மூலமாக மட்டுமே பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். திருப்புமுனை திட்டங்களை தீட்டுவதற்கு பதிலாக மக்களின் கவனத்தை திசை திருப்பும் பிரச்னைகளை அன்றாடம் தோற்றுவித்து நாடு முழுவதும் ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்தி தேசம் தேக்கநிலைக்கு தள்ளப்படுகிறது. தாராளப் பொருளாதாரத் தட்டுப்பாட்டினால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடுகின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றது. இதனால் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கிறார்கள். உற்பத்தித் திறன் குறைந்து, மக்கள் வாங்கும் சக்தியும் குறைகிறது. புதிய தொழில் தொடங்குவதும் நாடு முழுவதும் குறைந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவில் சிறு, குறு தொழில்கள் தொடங்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பிரபல தொழில் நிறுவனங்கள்கூட ஆட்குறைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு அறிவிக்கின்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இது மிகவும் கவலை தரும் செய்தியாகும். இந்த நிலையில் நாட்டை உற்றுநோக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசு-கள் தக்க திட்டங்களை தீட்டி உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதனை விடுத்து விளம்பரங்களுக்காக மட்டும் சாதாரண திட்டங்களை அறிவித்து, நாட்டு மக்களையும், நாட்டையும், பின்நோக்கி அழைத்துச் செல்லக்கூடாது. இந்திய அளவில் உள்ள எதிர்கட்சிகளின் செயல்பாடுகளும் மிகவும் கவலையளிக்கக்கூடிய அளவில் மட்டுமே உள்ளது. உதாரணத்திற்கு தற்போது நடைமுறையில் உள்ள ஒரே பிரச்னை குறித்து மட்டுமே, தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி மக்களை குழப்பத்தில் இருந்து மீட்பதற்கு பதிலாக, எதிர்கட்சிகளும் சிலநேரம் குழப்பத்திற்கு காரணமாகிறார்கள். குறிப்பாக நிர்பயா கொலை வழக்கு, பேரறிவாளன் விடுதலை, குடியுரிமை திருத்த சட்டம், மீத்தேன் போன்ற சில பிரச்னைகளைப் பேசி காலநேரம் விரயமாகிறது என்பதை எதிர்கட்சிகள் உணர்ந்து செயல்படுவது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டை ஆளும் கட்சியை விட, எதிர்கட்சிகளுக்குத் தான் கடமை உணர்வும், பொறுப்பும் அதிகம் தேவை. இதை உணர்ந்து மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் பொதுவாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இதுவே நூற்றி முப்பதுகோடி இந்திய மக்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும். வெல்லட்டும் இந்தியா, வளரட்டும் தமிழ்நாடு! வாழ்த்துகள்!

டெல்லிகுருஜி