April 19, 2024

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: பிரியங்கா புதிய வியூகம்

உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலை புதிய வியூகங்களுடன் அணுக பிரியங்கா திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மற்ற மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார்.

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 350 தொகுதிகளை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்து பாரதிய ஜனதா களப்பணிகளை தொடங்கி விட்டது.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் பங்களிப்பு தேவை என்பதால் அம்மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து பிரியங்கா அடிக்கடி உத்தரபிரதேசத்துக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் டெல்லியில் உத்தரபிரதேசம் தேர்தல் தொடர் பாக டெல்லி, அரியானா, ராஜஸ் தான், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் களை அழைத்து ரகசிய ஆலோசனை நடத்தினார்.

உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலை புதிய வியூகங்களுடன் அணுக பிரியங்கா திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மற்ற மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார்.

உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் மற்ற மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை களம் இறக்க அவர் முடிவு செய்துள்ளார். அவர்களுக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் தொகுதிகளை பிரித்து கொடுத்து பொறுப்பாளர்களாக நியமிக்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்.

வருகிற 15-ந் தேதி (புதன் கிழமை) லக்னோவுக்கு மற்ற மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வருமாறு அழைத்துள்ளார். முதல் கட்டமாக சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களுக்கு உத்தரபிரதேச மாநில சட்டசபை தொகுதிகள் பிரித்து கொடுக்கப்பட உள்ளன.

இதன் மூலம் அதிக வெற்றியை பெற முடியும் என்று பிரியங்கா எதிர் பார்க்கிறார். பிரியங்கா இந்த வியூகத்தை வகுத்துக் கொண்டிருந்த நிலையில் கோவா மற்றும் மேகாலயா மாநிலங்களில் இருந்து பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு தாவிவிட்டது குறிப்பிடத்தக்கது.