சென்னை: தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, திருச்சி, மருத்துவ கல்லூரி, தருமபுரி மருத்துவ கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளையும் ஆய்வு செய்த தேசிய மருத்துவ கவுன்சில் சில குறைபாடுகளை கண்டுபிடித்தது. இதையடுத்து இந்த 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனால் இந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும் போது, எந்த மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்தாகாது. ரத்து செய்யப்படும் அளவுக்கு அரசு நடந்து கொள்ளாது என்று உறுதியளித்தார்.
இதையடுத்து தேசிய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை தயார் செய்து தமிழக மருத்துவ துறை அதிகாரிகள் குழு டெல்லி சென்று அறிக்கை கொடுத்தது. அதன் பேரில் டெல்லி மருத்துவ குழுவினர் மீண்டும் தமிழகத்துக்கு வந்து ஆய்வு செய்து சென்றனர். இந்த நிலையில் சைதாப்பேட்டையில் இன்று இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை போன்ற மாய தோற்றத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, தருமபுரி மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து இயங்க தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி, அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்ட நோட்டீசையும் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது. திருச்சி மருத்துவ கல்லூரியில் ஆய்வு நடக்கிறது. ஆய்வு முடிந்ததும் அந்த கல்லூரியும் தொடர்ந்து இயங்க அனுமதி கிடைத்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
More Stories
2026 தேர்தல் – திமுக குழு ஆலோசனை
வன்னியகுல சத்ரிய நலவாரியம்
ஐ.நா. மனித உரிமை பேரவை
சுவிட்ஜர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது