நடிகர் விஜய் சமீபகாலமாக தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கி விஜய் ரசிகர்கள் மக்கள் சேவையில் இறங்கினர்.
234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி அவர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்று பேசி விஜய் அரசியல் அரங்கை அதிர வைத்தார். இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் திரளாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் எராளமான இடங்களில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். காமராஜர் பிறந்த நாளையொட்டி 234 தொகுதிகளிலும் ஏழை மாணவ-மாணவிகள் பயில இரவு பாடசாலை திட்டமான ‘தளபதி விஜய் பயிலகம்’ இன்று மாலை முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் இலவச பாடசாலை குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, “மாணவர்களுக்காக விஜய் இலவச பாடசாலை தொடங்கியுள்ளது நல்ல விஷயம் தான். இல்லம் தேடி கல்வியின் நோக்கமே அதுதான். கொரோனா காலத்தில் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களை சேர்பதற்கான பணிகளை செய்து வருகிறோம். இதற்கான பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.
More Stories
இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..!
அன்புமணி தாக்கு…!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்