அஜித்-எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை ஸ்பெயின் நாட்டில் படமாக்க உள்ளனர். ஸ்பெயின் அரசின் அனுமதிக்காக படக்குழு காத்திருக்கின்றனர். அனுமதி கிடைக்க தாமதமாவதால், கடந்த சில நாட்களாக, வலிமை படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறதாம். அதேபோல் நடிகர் அஜித் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே பு-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
More Stories
லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை
அயலான் டீசர் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்… ஏலியன்ஸுடன் சிவகார்த்திகேயன் கொடுத்த அப்டேட்
ஜெயிலர் வெற்றி.. காரை பரிசாக வழங்கிய கலாநிதி மாறன்