October 11, 2024

வன்னியருக்கு தனிஒதுக்கீடு வழங்குவதற்கு தடையில்லை சமூகநீதிக்கு வெற்றி! மு.க.ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி

தமிழகம் சமூகநீதி கொள்கையில் உறுதியாக நிற்கின்றது. அதன் அடிப்படையில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது. இஸ்லாமியர்களுக்கும் தனி ஒதுக்கீடு வழங்கியது. கிறிஸ்துவர்களுக்கும் தனி ஒதுக்கீடு வழங்கியது. இத்தகைய ஒதுக்கீட்டின் கதாநாயகன் திமுக கழக தலைவரும் மறைந்த முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் வன்னியர்களுக்கு 107 ஜாதிகளை உள்ளடக்கி 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதும் திமுக கழக அரசு. ஆனால் தனி ஒதுக்கீடு வேண்டும் என்று போராடியது வன்னியர் சங்கம் மட்டுமே. தற்பொழுது திமுக ஆட்சியில் வழங்கிய இடஒதுக்கீட்டிற்கு தடையில்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு சமூகநீதிக்கு மேலும் வலுசேர்த்து உள்ளது. குறிப்பாக தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல் மூலம் நிறைவேற்றுவதற்கு நீதிமன்ற தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஒருவேளை இந்த தீர்ப்பை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றுகின்ற வகையில் பல வன்னிய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சி இறுதிக் கட்டத்தில் உள்ள தருவாயில் வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று முடிவு எடுத்தால் அந்த முடிவு அதிமுகவிற்கு சாதகமாக அமையலாம். அல்லது திமுக தலைவர் அறிவிப்பு வெளியிட்டதினால் திமுகவும் இடஒதுக்கீட்டில் உரிமைக்கோரி ஆதாயம் அடையளாம். மொத்தத்தில் நீதிமன்ற தீர்ப்பு என்பது திராவிட கட்சிகளின் சமூகநீதி கொள்கைக்கு ஆதரவாக அமைந்துள்ளது என்பது வரலாறாம்.

வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வேண்டும் என்பதே வன்னியர்கள் கோரிக்கையாகும். ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்.