February 18, 2025

வன்னியகுல சத்ரிய நலவாரியம்

03.10.2024 அன்று சென்னை, எழும்பூர், வன்னியகுல சத்ரிய நலவாரிய அலுவலகத்தில், வன்னியகுல சத்ரிய மக்கள் சொத்து மீட்பு குழு சார்பாக, வன்னிய அறக்கட்டளைக்கு சொந்தமான, சொத்துக்களை, மீட்க நடவடிக்கை எடுக்க, மனு கொடுக்க பட்டது. குறிப்பாக, தர்மபுரி வன்னிய மக்கள் கல்வி, அறக்கட்டளைக்கு சொந்தமாக, உள்ள தர்மபுரி கலெக்டர் பங்களா, பின்புறம் உள்ள, சுமார் 14 ஏக்கர் நில சொத்துக்களை, மீட்க, வன்னிய நல வாரியம் தலைவர் ஜெயராமன் மிகிஷி, அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள், வன்னிய சத்ரிய சங்க மாநில ஒருங்கிணைப்பாளர், டாக்டர் தமிழரசன், மாநில சொத்து மீட்பு குழு தலைவர் தென்வராயன், மாநில பொருளாளர் அரங்கன்னல், தர்மபுரி மாவட்ட சொத்து மீட்பு குழு தலைவர் திருமுருகன், நிர்வாகி ஹரிகிருஷ்ணன் மற்ற நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.