September 18, 2024

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் பங்கேற்பு

வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14 அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் முன்னிலை வகித்தார். மண்டல குழு தலைவர் பெருங்குடி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கண்காணிப்பு அதிகாரி சுப்புலட்சுமி (ஐ.ஏ.எஸ்) அவர்கள் மேற்பார்வையிட்டார். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் நிகழ்ச்சியில் அதிகாரிகள் பங்கேற்றார்கள்.