பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் நிறுவனம் சு0சு6 ஆம் ஆண்டு டாக்டர் அன்புமணி தான் முதல்வர் என்றும் அதிமுக, திமுக கட்சிகளுடன் எக்காரணத்தை கொண்டும் கூட்டணி இல்லை என்றும் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியை கேட்டும், பார்க்கும் பொழுது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் குறிப்பாக வன்னியர்களும் வலைதளம் மூலமும் பேஸ்புக் டுவிட்டர் போன்ற நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு கடும் கண்டனத்தையும் அறிவுரையும் கூறி, தங்கள் கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவில் உள்ள வன்னியர்களும் இத்தகைய செயல்பாடுகளை விமர்சித்து வருவதுடன் ராமதாஸ் மீது வெறுப்புணர்வை கொண்டுள்ளார்கள். தோழமை கட்சியான அதிமுக ராமதாஸ் மீதுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக இந்த பேட்டி அமைந்துள்ளதாக கூறுகிறார்கள். இதனால் பாமக 5 சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றம் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இப்படி ஒரு பேட்டியை ஏன் கொடுத்தார் என்று தெரியவில்லை என்று புலம்பி கொண்டிருக்கிறார்கள்.
& டெல்லிகுருஜி
More Stories
2026 தேர்தல் – திமுக குழு ஆலோசனை
வன்னியகுல சத்ரிய நலவாரியம்
ஐ.நா. மனித உரிமை பேரவை
சுவிட்ஜர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெற்றது