சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளிலும், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மேலும், தஞ்சாவூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
More Stories
ஈரோடு இடைத்தேர்தல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி திட்டம்…!
இடைத்தேர்தல் முடிவு…!
இடியாப்ப சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..!
பத்ம பூஷன்-பத்மஸ்ரீ விருது பெறுபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு