April 25, 2024

மோடியின் சொந்த மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு நெருக்கடி

[responsivevoice_button voice=”Tamil Male”]குஜராத்தில் சட்ட அமைச்சராக இருப்பவர், பூபேந்திரசிங். கல்வி, நீதிமன்றம், சட்டமன்ற விவகாரங்கள் உள்ளிட்ட பல துறைகளும் இவர் பொறுப்பில் உள்ளன. குஜராத் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பூபேந்திரசிங், டோல்கா தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.வெறும் 327 ஓட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற, இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், அவரிடம் தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர், அஸ்வின் ரதோட். இந்த தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 356 தபால் ஓட்டுகள் பதிவானது.அதில் 429 ஓட்டுகளை தேர்தல் அலுவலர், ஓட்டு எண்ணிக்கையில் சேர்க்கவில்லை’’ என்பது காங்கிரஸ் வேட்பாளரின் பிரதான வாதம் இந்த வழக்கை நீர்த்து போகச்செய்யும் வகையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குஜராத் உயர்நீதிமன்றம் ஒரு தலை பட்சமாக செயல்படுகிறது’’ என்று அமைச்சர் பூபேந்திரசிங் உச்சநீதிமன்றம் வரை சென்றார்.அவரது மனு உச்சநீதிமன்றத்தில் எடுபடவில்லை.உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை, மாரத்தான் ரகம். 73 முறை விசாரணைகள் நடந்துள்ளன. ஒரு கட்டத்தில் அமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் இருந்து விலகி கொண்டார். இந்த வழக்கில், நீதிபதி பரேஷ் உபாத்யாய், பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அமைச்சர் பூபேந்திரசிங் வெல்வதற்காக இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன.எனவே அவரது வெற்றி செல்லாது’’ என்று தீர்ப்பு வழங்கினார், நீதிபதி. தேர்தல் அலுவலருடன் இணைந்து அமைச்சர் முறைகேடு செய்ததையும் நீதிபதி, தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனால் அமைச்சர் தரப்புக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் குஜராத், மோடியின் சொந்த மாநிலம். அமைச்சரின் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பு மோடிக்கு சங்கடத்தை உருவாக்கியுள்ளது, நிஜம். அந்த மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த 20 வேட்பாளர்கள் உயர்நீதிமன்றதில் வழக்கு தொடந்துள்ளனர். நிலுவையில் உள்ள இந்த வழக்குகளில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தீர்ப்பு அமையுமானால், குஜராத் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து. இந்தியாவில் மராட்டியத்தை அடுத்து குஜராத் மாநிலத்தில் தான் கொரோனாவுக்கு,பலியானோர் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகம் கொரோனாவை எதிர்த்து அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி போராடிக்கொண்டிருக்கும் நிலையில், மூத்த அமைச்சரின் எம்.எல்.ஏ. பதவி பறிப்பு அவருக்கு புதிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.