பரம்பரை தொழிலதிபரான முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 50 ஆண்டுகளுக்கு முன்பே சொகுசு கார் வாங்கி அதில் வலம் வந்தவர் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அவரது தந்தை பீடி தொழிலில் ஈடுபட்டு பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியை ஈட்டியது என்பதும் பலருக்கு தெரியவாய்ப்பில்லை. அதே பல்வேறு தொழில்கள் மூலம் பலகோடி ரூபாய் வருமானம் வந்து கொண்டிருப்பதும் பலருக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை. அவரது குடும்பமே பொது சேவையில் ஈடுபட்டு பலமுறை பொருள் இழப்பையும் அரசியல் வாய்ப்புகளையும் ஏற்காமல் ஒதுங்கி இருந்த குடும்பமாகும். கடந்தமுறை அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட வீரமணி அவர்கள் ஜோலார்பேட்டை தொகுதியில் வெற்றிப்பெற்று முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுதுறை பள்ளி கல்வி துறை, வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை என்று பல துறைகளில் அமைச்சராக இருந்து நற்பெயர் பெற்றவர். அதே போல் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு முதல்வர் எடப்பாடி அவர்கள் தலைமையில் அமைச்சராக இருந்து எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு விசுவாசமாக செயல்பட்டார். இப்பொழுதும் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்த நிலையில் புதிதாக ஆட்சிக்கு வந்த திமுக அரசின் மீது இவர் பாதை பட்டது. இதற்கு அடிப்படை காரணமாக அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு உண்மை தெரியாமல் கே.சி.வீரமணியின் உண்மைகள் தெரிந்துக் கொள்ளாமல் அரசியலில் ஈடுபட்டு அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்று ஆதராங்களுடன் குற்றம் சாட்டுவதை போல் ஒரு புகாரை லஞ்ச ஒழிப்பு துறையிடம் வழங்கியுள்ளது. இதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் சசிகலாவும், டிடிவி தினகரன் என்பதும் பலருக்கு தெரியவாய்ப்பில்லை. காரணம் இன்றைய திமுக அரசுக்கு ஆதரவு நிலையை கடந்த சட்டமன்ற தேர்தலில் எடுத்தது சசிகலாவும், டிடிவி தினகரனும் என்பது தான். ஆகவே முன்னாள் அமைச்சர் கேவி வீரமணி அவர்கள் வீட்டின் நடைபெற்ற சோதனையும் அதில் கைப்பற்றப்பட்ட பொருள்களும் ஊடகங்கள் மூலமாக தொலைக்காட்சி மூலமாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக வெளியிடப்பட்டு சித்தரிக்கப்பட்டதாகும்.
இந்த செய்தி வீரமணி அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் அவமானப்படுத்த வேண்டுமென்றே நடைபெற்ற சம்பவமாக அதிமுகவினர் கருதுகிறார்கள். சட்டப்படி அந்நியச் செலவாணி அவரோடு இருப்பதற்கும் மணல் வாங்கி வைத்ததற்கும் தங்கள் தொழிலின் விரிவாக்கம் செய்ததற்கும் வீட்டில் உள்ள தங்க நகைகள் பொருட்கள் போன்றவை உள்பட அனைத்திற்கும் சட்டப்படி வருமான வரி துறையிடம் தெரிவிக்கப்பட்டு கணக்கில் இருப்பவை மட்டுமே என்பது சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும். இதனால் தான் வீரமணி அவர்கள் மீது எந்தவித அடிப்படை ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி அவரை அவமானப்படுத்தி விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். தொலைக்காட்சி, ஊடகங்கள், வெளிவந்த செய்திகளும் அதில் காட்டப்பட்ட படங்களும் தகவல்களும் சினிமாவில் வந்த காட்சிகளைப் போல் இருந்ததே தவிர எங்கள் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதும் எதுவும் இல்லை என்று செய்தியாளர்கள் மத்தியிலேயே ஆதாரங்களை காட்டி முன்னாள் அமைச்சர் வீரமணி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக மற்றும் பாமக ஆளுநரிடம் வழங்கிய ஊழல் பட்டியலை தான் தற்போது திமுக ஆட்சி நடவடிக்கை எடுக்கிறது என்று ஒருபக்கம் கூறினாலும் இன்னொரு பக்கம் பார்க்கும் பொழுது வேலுமணி, வீரமணி, விஜயபாஸ்கர் போன்றோர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனை என்பது தனிப்பட்ட யாரோ ஒரு சிலரை திருப்திபடுத்துவதற்காகவும் அதன் மூலம் கிடைக்கும் ஆதாயத்தை வைத்து அரசியல் நடத்துவதற்காகவும் நடைபெற்ற சோதனையாகவே பொதுமக்களால் பார்க்கப்படுகிறது என்கிறார்கள் அதிமுகவினர். பல ஆண்டுகளாக சொந்த தொழில் நடத்தி திராவிடர் கழகத்திற்கு பல ஆயிரங்களை வழங்கி பெரியார் கொள்கை ஊறி திளைத்த குடும்பத்தில் பிறந்து இன்றும் தொழிலதிபராக இருந்துக் கொண்டு இருக்கும் கே.சி.வீரமணி அவர்கள் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும் எங்கள் சொத்துக்கள் முழுவதும் தாங்கள் உழைத்து சம்பாதித்த சொத்துகள் என்றும் வழக்குகளை சட்டப்படி சட்டடத்தின் துணைக்கொண்டு வெற்றிப்பெறுவேன் என்றும் முற்றுப்புள்ளி வைக்கிறார். இது மட்டுமல்ல குறிப்பாக ஊராட்சி உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும் இந்த சமயத்தில் வீரமணி அவர்களின் வீட்டை சோதனையிட்டால் ஊராட்சி, உள்ளாட்சி தேர்தல்களில் திமுக சுலபமாக வெற்றிப்பெற்று விடலாம் என்று கணக்குப் போட்டு தான் இதுபோன்ற செயலில் திமுகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஈடுபட்டு உள்ளார்கள்.
ஆனால் தேஙைதல் முடிவுகள் அதிமுகவிற்கே சாதகமாக முடியும் என்று அடித்து சொல்லுகிறார் அந்த மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும், சி.வி.சண்முகம் அவர்களும் ,இதற்கு ஏற்றார்போல் ஏலகிரி தொகுஊராட்சியில் திமுகவுக்கு எதிராக அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக இணைந்து போட்டியிடுகின்றனர். ஒரு அணியில் இருந்து போட்டியிடுகின்றனர். திமுக மட்டும் தனித்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இரவு பகல் சுழன்று சுழன்று பணியாற்றி வரும் உள்ளாட்சிதுறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் ஆகியோரின் உழைப்பிற்கு பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
& டெல்லிகுருஜி
More Stories
இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..!
அன்புமணி தாக்கு…!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்