சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டின் 29-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த போட்டியை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர், இவர்களுடன் அமர்ந்து நடிகர் தனுஷ் போட்டியை நேரில் கண்டுகளித்துள்ளார். மேலும், இந்த போட்டியை காண அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகள் மற்றும் மகனுடன் வந்திருந்தார். அதுமட்டுமல்லாமல், இயக்குனர் மோகன் ஜி, நடிகைகள் பிரியங்கா மோகன், சாக்ஷி அகர்வால், நடிகர்கள் நாகசைதன்யா, சதீஷ் ஆகியோரும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து போட்டியை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
சென்னையில் – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்..!!
ஆசிய விளையாட்டு போட்டி – மேலும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி- 27 பதக்கங்களுடன் 3ம் இடம் பிடித்தது இந்தியா