November 2, 2024

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் சமீபத்தில் காலமானதை முன்னிட்டு அவருக்கு ஆறுதல் சொல்வதற்கும் செலுத்திவிட்டார்கள். அதே போல் அனைத்து சமுதாய சங்கங்களும் அஞ்சலி செலுத்தி முதல்வருக்கு ஆறுதல் கூறிவிட்டார்கள். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அறிவித்தப் பிறகு அரசியலில் அவரது மதிப்பு மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்பதை இந்த இரங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ் சலி செலுத்திய தலைவர்களை பார்க்கும் பொழுது அரசியல் பார்வையாளர்களுக்கு தெளிவாக தெரிகிறது. அதே போல் கூட்டணி கட்சி தலைவர்களுக்குள்ளும் ஒருவிதமான பதட்டம் நிலவுகிறது.

கூட்டணியில் நாம் தொடர்ந்து இருப்போமா அல்லது கூட்டணியில் இருந்து தங்களை விலக்கி விடுவார்களா? என்கின்ற ஒருவித பதற்றம் தற்போதைய அதிமுக கூட்டணியில் நீடித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளதாம். தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 6 மாத காலம் அவகாசம் இருக்கிறது என்றாலும் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்குங்கள் என்று தனது நம்பிக்கைக்குரியவர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய்வழி உத்திரவினை பிறப்பித்ததோடு கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்கான முழு ஏற்பாட்டினையும் செய்யும் படி கூறியுள்ளாராம்.

முதல்வரின் கட்டளையை ஏற்று வட மாவட்டத்தில் சில அமைச்சர்கள்களும் மேற்கு மாவட்டத்தில் உள்ள அமைச்சர்களும் நல்லநாள் பார்த்து தேர்தல் பணியை துவங்கி வைக்க உள்ளார்களாம். குறிப்பாக அதிமுகவினர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் என்னவென்றால் கூட்டணியைப் பற்றியோ அல்லது தோழமை கட்சிகள் குறித்தோ எந்தவித ஐயப்பாடும் அதிமுகவினர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி விஷயத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஒட்டு வாங்கும் காரியத்தை நீங்கள் கடமை தவறாமல் நிறைவேற்றி தாருங்கள் என்று தெளிவாக கூறிவிட்டனர். ஆக தீபாவளி முடிந்தவுடன் அதிமுகவின் தேர்தல் பணி சுறுசுறுப்பு அடையும். கொரனாவால் ஏற்பட்ட பாதிப்பும் வேகு வேகமாக விலகிக் கொண்டு தாராள புழக்கம் நிலவுகின்ற வகையில் தேவைக்கேற்ப கை மேல் பலன் வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறிவிட்டாராம். இத்தகைய நடவடிக்கைகளை கண்டு முதல்வர் எடப்பாடியின் ராஜதந்திரம் என்று அதிமுகவினர் கருதிக்கொண்டு உற்சாக வெள்ளத்தில் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றாராம். !

/ சாமி