March 27, 2025

முதல்வருக்கு அச்சமா? அமைச்சர்கள் மிரட்டலா?

தமிழ்நாடு அரசு தேர்தல் பணி ஆணையம். உறுப்பினர் தேர்வு நியமனத்தில் ஏன் விரைந்து முடிவெடுக்க பழனிசாமியால் ஏன் இயலவில்லை. ஒருவேளை அமைச்சர்கள் வழங்கும் கூடுதல் சிபாரிசு பட்டியலில் உள்ளவர்களை தேர்வு செய்வதில் குழப்பமா அல்லது ஒரு தலைவர் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை நடத்தி ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்ற முடிவில் முதலமைச்சர் செயல்படுகிறா? என்ற கேள்வி எழுகிறது.

சுமார் 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்விலும் ஒவ்வொரு விதமான மோசடிகள் நிகழ்ந்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற குருப் 4 தேர்வில் நடைபெற்ற மெகா ஊழல் என்பது தேர்வாணையத்தின் நற்பெயருக்கு பெருங் கலங்கத்தை விளைவித்துள்ளது. இந்த தகவல் தொலைக்காட்சி மூலமாகவும் செய்தித்தாள்கள் வழியாகவும் பகிரங்கமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் 14 உறுப்பினர்களும் ஒரு தலைவரும் இருக்க வேண்டிய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தில் மூன்று உறுப்பினர்களையும் ஒரு தலைவரையும் மட்டும் வைத்துக் கொண்டு மற்ற உறுப்பினர்களை ஏன் தேர்வு செய்து பூர்த்தி செய்யாமல் முதலமைச்சர் காலம் தாழ்த்தி வருகிறார் என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு கொண்டிருப்பது பல்வேறு வகைகளில் அரசு அதிகாரிகள் மத்தியில் பலவிதமான குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஊழலை மறைப்பதற்காக சில முக்கிய பிரமுகர்கள் முயற்சித்து வருவதாகவும் தெரிகிறது. இதற்கு காரணம் கடந்த 20 ஆண்டுகளில் முறைகேடாக தேர்வாகி உள்ள பலர் குரூப் 1 தேர்வில் வெற்றிப்பெற்று பதவியில் இருப்பது தான் காரணம் என்றும் இத்தகையோர் மீது நடவடிக்கை மேற்கொண்டால் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டும் என்பதாலும் அல்லது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதாலோ இந்த உறுப்பினர் நியமனம் தள்ளிப்போகலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். இருந்தாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விரைவாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள உறுப்பினர்களின் பணியிடங்களை அறிவித்து நேர்மையான முறையில் அரசு பணியாளர் தேர்வு வாரியம் செயல்பட வழிகாண வேண்டும் என்பதே பலரின் விருப்பம்.

ஒருவோளை சிபிஐ வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைப்பெற்றால் பல்வேறு தனியார் பயிற்சி நிறுவனங்களும் பலதுறை அரசு அதிகாரிகளும் சிக்கும் வாய்ப்பு உள்ளதாக கோட்டை வட்டார தகவல் தெரிவிக்கின்றது.