December 3, 2024

மீண்டும் தேமுதிக எழுச்சி பெறும்

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தர்மபுரிக்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது எம்பி தேர்தல் பணி துவங்கி உள்ளது. தேர்தல் சமயத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சி தலைமை கூடி முடிவெடுப்போம். அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். தேமுதிகவின் வாக்குவங்கி உயரும். மீண்டும் தேமுதிக எழுச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.