January 26, 2025

மாண்புமிகு,தமிழக முதலமைச்சரின் கனிவான பார்வைக்கு

1.தமிழ்நாடு தேர்வனைய உறுப்பினர்களில் கடந்த 10 ஆண்டுகளில் ஒருவரும் வன்னியர் குல சத்திரியர் இல்லை . தற்பொழுது ஒருவர் மட்டுமே !

2 . தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் (T.N.P.S.C) குரூப் 1, குரூப் 2 தேர்வுமுறையில் எழுத்துநேர்முக தேர்வில், கடந்த 10 ஆண்டுகளாக
துணை ஆட்சியர், மாவட்டவருவாய் அலுவலர், மோட்டர் வாகன ஆய்வாளர்
துணை இயக்குனர் தேர்வு செய்யும்போது
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 115 சாதியில் பெரும்பான்மை சமூகமான வன்னியர் குல சத்திரியர் ஒருவர்கூட தேர்வாகவில்லை.

3 . குரூப் – 4 -ல் அலுவலக உதவியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் MBC-20 சதவீதத்தில் வன்னியர் குல சத்திரியர்கள் தோராயமாக 5 சதவீதம் மட்டுமே தேர்வாகிவாகியுள்ளனர் . 15 சதவீதம் மீதமுள்ள சமுதாயத்தினர் தேர்வாகியுள்ளனர்.

  1. மருத்துவப் (MBBS)படிப்பில் “நீட்” தேர்வுக்கு முன்பாக 3 சதவீதத்திற்குமேல் வன்னியகுல சத்திரிய மாணவர்கள் தேர்வாகவிலலை. கடந்த 5 ஆண்டுகளாக “நீட்” தேர்வு வந்தபிறகு ஒரு சதவீதம் கூட தேர்வாகவில்லை.

5 . 24 அரசு பல்கலைக் கழங்களில் கடந்த 10 ஆண்டுகாலமாக ஒரு துணைவேந்தர்கள் கூட நியமிக்கப்படவில்லை.

  1. தமிழ்நாடு அரசின் 34 துறைகளில் அரசு செயலாளர்களாக கடந்த 10 ஆண்டுகளில் முதல் இதுவரை ஒருவர்கூட (ஐ.ஏ.எஸ்) நியமிக்கப்படவில்லை .அதேபோன்று 64 முதன்மை செயலாளர்களில் ஒருவர் கூட யில்லை.
  2. சென்னை உயர்நீதிமன்றத்தில் “கொலிஜியத்தால் “தேர்வு செய்யப் படுகிற சீனியர் வழக்கறிஞர் உயர்திரு, என்.எம் மணிவர்மா அவர்களுக்கு பிறகு ஏறக்குறைய 20 ஆண்டுகளாகியும் ஒருவன்னியர் குல சத்திரியர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை.

8 – கடந்த 10 ஆண்டுகளில் வன்னியர் குல சத்திரிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடமாவட்டங்களில்
10 – மற்றும் +2-தேர்வில் வன்னியர் குல சத்திரியசமுதாய மாணவர்கள் குறைந்த அளவில் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.
அதேபோல் அப்பகுதிகளில் குழாய் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்குவது குறைவு-மற்ற மாவட்டங்களை விட மிக ,மிக குறைவு
வடமாவட்டங்களில் தனிமனித வருமானம் (வன்னியர் குல சத்திரியர்கள்) செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை தவிர ஏனைய மாவட்டங்களில்
மிக,மிக குறைவாகவுள்ளது.

  1. 2011-ம் ஆண்டு அரசின் புள்ளிவிவர கணக்கு எடுப்பின்படி
    வன்னியர் குல சத்திரியர்கள் பெருமான்மையாக வாழும் வடமாவட்டங்களில்
    குடிசை வீடுகள் அதிகமாகவுள்ளது.
  2. காவல்துறையில் உயர்பதவிகளில் குறிப்பிடும்படியான பதவிகளில் வன்னியர் குல சத்திரியர்கள் நியமனமில்லை.
  3. பெரும்பாலும் கட்டுமானத் தொழில் – விவசாயம் உள்ளிட்ட தொழில்களில் கூலித்தொழிலாளிகளாகவே வாழ்கிறார்கள்.

நிலைமை இப்படியிருக்க-சமூகநீதியில் மிக, மிக, பின்தங்கிய சமுதாயமாக வன்னியர் குல சத்திரியர்கள் இருக்கிறார்கள் என்பது மேலேவுள்ள குறிப்புகளின் மூலம் தெள்ளதெளிவாக தெரிகிறது.

1987-ம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் 23- வரை தனி இடஒதுக்கீடு கேட்டுநடைப்பெற்ற போராட்டத்தில் வன்னியர் குல சத்திரியர்கள் 21 பேர் துப்பாக்கி சூட்டிற்கு பலி கொடுத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறை சென்று

1989 -ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் (B.C) பிரிவில் 50 சதவீதத்தில்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவை ஏற்படுத்தி வன்னியகுல சத்திரியர்கள் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு (தற்போது 115) 20 சதவீதம் பெற்று அதில் ஒன்று முதல் 5 சதவீத்திற்கும் குறைவாகதான்

மருத்துவம் படிப்புகளிலும் அரசுவேலைகளிலும் கிடைக்கப்பெற்றது.

எந்தவித ஆர்ப்பாட்டம், போராட்டம், உயிர் தியாகம், சிறைக்கு செல்லாமல் 20 சதவீத்தில் 17 சதவீதத்தை 114 சமூகத்தினர் பெற்ற வந்துள்ளனர்.

இந்த நிலை 1989 – முதல் 31ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இதனால்தான் உயர்நீதிமன்றத்தை நாடி அதன் வழிகாட்டுத்தலின்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களின் பரிந்துரையை ஏற்று ஏற்கனவே உள்ள சாதிவாரி கணக்கெடுப்படி திருவாளர்கள் சட்டநாதன், அம்பா சங்கர் கமிஷனை மேற்கோள்காட்டி

கடந்த அ.தி.மு.க அரசு சட்டமன்றத்தின் மூலம் சட்டம் இயற்றி வன்னியர் குல சத்தியர்களுக்கு MBC (V) உள்ஒதுக்கீடாக 10.5 சதவீதம் வழங்கி
ஆளுநரின் ஒப்புதலை பெற்றது.
ஆட்சிமாற்றுத்திற்கு பிறகு புதியதாக பொறுப்பு ஏற்ற மாண்புமிகு,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வன்னியர்களில் தனி உள் இடஒதுக்கீடு10.5 சதவீதற்கு முழு சட்ட பாதுகாப்பு வழங்கி செயல்படுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி கல்வி, உள்ளிட்ட அனைத்துறைகளிலும் வன்னியர் குல சத்திரியர்களுக்கான (MBC -V) 10.5 இடங்கள் முறையாக அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கும் வந்தது.

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள்
சட்டமே சொல்லாது என்று சில கேள்விகளை எழுப்பி MBC V_10-5 சதவீதத்தை ரத்து செய்தனர்.

அரசு தரப்பு வாதமும், பிற தரப்பு வாதங்களும் தரவின் அடிப்படையில்லாதால் சமூகநீதிஎதிராக அமைந்து விட்டது.

ஆனால் இந்த தீர்ப்புவன்னியர்களுக்கு எதிரான தீர்ப்பாக கருதாமல் எதிர்கால நன்மை கருதி 69 சதவீதத்திற்கு இடர்பாடு ஏற்படாதவனகயில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து
தடை ஆணை பெற்று வன்னியர்களின் தனி உள்ஒதுக்கீட்டை பாதுகாத்து சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள அநீதியை நீக்கி முதலமைச்சர் சமூகநீதியின் பாதுகாவலராக திகழ வேண்டும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைப்பெற்ற வழக்கில் 16 சதவீதம் 12 சதவீதமான போது உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கு வந்தபோது மூன்று கேள்விகளை எழுப்பியது.

அதில்ஒன்று
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPC)
மூலம் மராட்டிய சமூகத்தினர் எத்தனை பேர் தேர்வாகியுள்ளனர் என்ற வினா எழுப்பியது. அதற்கு கிடைத்த பதில் வெறும் 6 .5சதவீதம் மட்டுமே இதனால் உச்சநீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. அதனால் மகாராஷ்டிரா அரசு மீண்டும் சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு சட்டத்தை தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி தற்போது ஏற்கனவே கொண்டுவந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு அத்தகைய நடைமுறையை கையாண்டு வன்னியர் குல சத்திரியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை ஏன் நடைமுறைப்படுத்தி செயல்படுத்தலாமே இதுவே 2 கோடி வன்னியர்களின் விருப்பமும் வேண்டுகோளுமாகும்

“வெண்ணைய்கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு கைஏந்துவது ஏன் .

மாண்புமிகு,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நாங்கள் வேண்டுவது

தந்தை “முத்தமிழ் அறிஞர்”
கலைஞர் அவர்கள்

2006 -ம் ஆண்டு ஆட்சியில் (MBC/M) முஸ்லீம்களுக்கு உள் இடஒதுக்கீடும்

அருந்ததியர் சமுதாயத்திற்கு (SCA) உள் இடஒதுக்கீடு சட்டமாக்கி செயல்படுத்தி வரலாற்றில் வாழ்ந்துக்கொண்டுயிருக்கிறார்.

தந்தைவழியை பின்பற்றி ஆட்சி நடத்தும் முதலமைச்சர் அவர்கள் எந்தவழியை பின்பற்றினாலும் வரவேற்கிறோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு முன் 7-10 -219-ல் கொடுத்த வாக்குறுதிப்பட வன்னியர் குல சத்திரியர்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு 10.5 சதவீ இடஒதுக்கீடுக்கு
சட்டரீதியான உரிய பாதுகாப்பு வழங்குவார் என்று நம்புகிறோம்.

மூத்தசெய்தியாளர்கள்

R.பன்னீர்செல்வம்
ஆசிரியர் – அக்னிமலர்

R.A.R. கண்ணன் சத்திரியர்