December 7, 2024

புரட்சிப் பெண் ஐஸ்வர்யா ஐ.ஏ.எஸ்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன், என்ற வள்ளலார் பிறந்த பூமியில் சேவை மனப்பான்மை கொண்ட குடும்பத்தில் பிறந்த ஐஸ்வர்யா இன்று ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிப் பெற்று தமிழகத்திலேயே பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். & ஆர்பாராட்டுக்குரிய ஐஸ்வர்யா ஐ.ஏ.எஸ் குடும்பம் பற்றிய விவரம்தென்னாற்காடு கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கா மறும்பூர் முன்னாள் சேர்மன் ரங்கநாத படையாச்சி அவர்களின் பேத்தியும் கொள்ளுக்காரன் குட்டை, கிடாவிருந்து ஹோட்டல் உரிமையாளருமான கே.ஆர்.ராமநாதன் மகள் ஐஸ்வர்யா ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழக அளவில் இரண்டாவது இடமும் அகில இந்திய அளவில் 47வது இடமும் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார். இவர் மிக மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த (வன்னியர்) என்பது குறிப்பிட்டத்தக்கது.

இதே பண்ருட்டி தாலுக்காவில் மேலும் இரண்டு பெண்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்த ஆண்டு வெற்றிப்பெற்று உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வெற்றி என்பது மிகமிக பிறப்படுத்தப்பட்டுள்ள சமுதாயத்தில் பிறந்துள்ள அனைவருக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியது. முயன்றால் நீங்களும் வெற்றிப்பெறலாம்.