November 3, 2024

புதிய கல்வி கொள்கையைவரவேற்கும் காங்கிரஸ் நடிகை குஷ்புவின் கருத்து!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளராக பதவி வகிக்கும் திரைப்பட நடிகை குஷ்பு விரைவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவார். சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்வி கொள்கை குறித்து தனது கருத்தை வெளியிட்டிருந்தார் குஷ்பு. அந்த கருத்து திமுக கூட்டணி கட்சிகளுக்கும், கொள்கைகளுக்கும் முரணாக இருப்பதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குஷ்புவின் கருத்துக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இருந்தாலும் தனது பதிலில் காங்கிரஸ் கட்சியின் நிலவிவரும் ஜனநாயகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கே.எஸ்.அழகிரி குஷ்புவுக்கு ஒரு பொட்டு வைத்துள்ளார். பாஜக கட்சியின் திட்டமும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மும்மொழி கொள்கையும் இந்தியா முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகின்ற நிலையில் தமிழகம் மட்டும் இருவழி கொள்கை கடைப்பிடித்து வருவதால் திராவிட கட்சிகளுக்கு மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு தமிழ்நாட்டு மாநில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் மத்திய அரசு தனது நிலையில் இருந்து வந்தாலும் பின்வாங்க போவதில்லை. வழக்கம் போல் திராவிடர் கட்சிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி தற்போது அறிவித்துள்ள திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவர வலியுறுத்துவோம் என்று தப்பித்துக் கொள்வார்கள். தமிழகத்தை பொறுத்தவரை எதை பின்பற்ற வேண்டும், எதை பின்பற்ற கூடாது என்ற தெளிவு தமிழக மக்களிடம் உறுதியாக தெரியவில்லை. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் மத்திய அரசின் கல்வி சிபிஎஸ்சி பாட திட்டத்தின் மூலம் கல்வி பயிற்சிக்கப்படுவதால் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் எத்தகைய பிரச்சனையும் ஏற்படபோவதில்லை. திராவிட கட்சிகள் இருமொழி கொள்கையை வலியுறுத்தி பேசும்போது இனிவரும் காலங்களில் அது எந்தஅளவிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது தெரியவில்லை.