September 18, 2024

பீகார் பொது தேர்தல் பிரதமர் மோடிக்கு சவால்! தேஜஸ்ஸ்ரீ யாதவ், சிராஜ்பஸ்வான் இளைஞர்கள் ஆதரவு!

முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஆபத்து!

பீகாரில் கடந்த பல ஆண்டுகளாக குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு மேல் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இடையில் காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதாதளம் நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் பாஜக கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார் முதல்வர் நிதிஷ்குமார். இதனால் நிதிஷ்குமார் பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் நிதிஷ்குமாரோடு பாஜக கட்சி தலைவர்களால் இணக்கமான சூழ்நிலையில் அரசியல் செய்ய இயலவில்லை. பாஜக கட்சியின் மத்திய அரசின் அங்கம் வகிக்கும் ராம்விலாஸ் பஸ்வான் கட்சியான லோக் ஜனசக்தி அவர் மறைவிற்கு பிறகு கூட்டணியில் இருந்து விலகி பீகார் சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி யிடுகிறது. சிராஜ்பஸ்வானுக்கு மறைமுக ஆதரவையும் பிரதமர் மோடி அவர்களும், பாஜக கட்சியும் வழங்கி வருவதாக பீகார் மாநில மக்கள் மனதில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் ஆட்சியில் சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.

ஒருவேளை ராஷ்டிரிய ஜனதாள தளம், காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிப்பெற்றால் முதல்வர் பதவி லாலுபிரசாத் கட்சி அவரது மகன் தேஜஸ்ஸ்ரீ யாதவ் முதல்வராக பதவி ஏற்பார். நிதிஷ்குமார் கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் போனால் குறைந்த இடங்களில் வெற்றிப்பெற்று பாஜக கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தால் அதற்கு பாஜக கட்சியில் இருந்து முட்டுக்கட்டை போடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை கூட்டணியில் இருந்து நிதிஷ்குமாரை ஒதுக்கிவைத்து விட்டு ராம்விலாஸ் பஸ்வான் கட்சியான ரோப் ஜன்சக்தி கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி பாஜக கூட்டணி ஆட்சியை ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ்பஸ்வானுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்புகள் உருவாகலாம்.

தற்போதைய முதல் கட்ட வாக்கு பதிவும், இரண்டாம் கட்ட வாக்கு பதிவும் தற்போது உள்ள நிலவரப்படி பார்க்கும் பொழுது ராஜ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கு கட்சிக்கு அதிக அளவு வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று அதன் மூலம் இளைஞர்கள், தலித் மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தால் சிராஜ்பஸ்வான் லோக்ஜனசக்திக்கு கூடுதல் இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. மொத்த 235 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக கட்சி 35, ராஜ்ட்ரிய ஜனதாதளம் 105, காங்கிரஸ் 20, சிராஜ்பஸ்வான் லோக்ஜன்சக்தி 15, நிதிஷ்குமார் 52 தொகுதி, இதர கட்சிகள் 8 தொகுதியும், ஒவ்வொரு கட்சிக்கும் கட்சியுனுடைய நிலையும் இந்த வகையில் வெற்றி வாய்ப்பு இருந்தால் எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

அதே நேரம் அதிக இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக வெற்றிப்பெறும் வாய்ப்பு லாலுபிரசாத் கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு உண்டு. இரண்டாவது இடத்தில் லோக் ஜன்சக்தி அதிக இடங்களை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மூன்றாவது இடத்தில் பாஜக கட்சியும், நான்காவது இடத்தில் மதசார்பற்ற ஜனதா தளமும், ஐந்தாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி வாய்ப்புகளை பெறமுடியும். இதர சிறு சிறு கட்சிகள் தோழமை கட்சிகளுடன் ஆதரவுடன் ஒரு சில இடங்களில் வெற்றி வாய்ப்புகளில் வெற்றிப்பெற கூடும்.

பீகார் தேர்தலை பொறுத்தவரை பிரதமர் மோடி அவர்களுக்கும், பாஜக கட்சிக்கும் மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். நிதிஷ்குமார் கட்சி பெரும்பாலான இடங்களில் போலிகளை சந்திக்க வேண்டிவரும். தற்போன நிலவரப்படி லாலுபிரசாத் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் முன்னணியில் இருப்பதாக தெரியவருகிறது. சிராஜ் பஸ்வான் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கு கடுமையாக போராடி வருகிறார். மொத்தத்தில் பீகார் தேர்தல் முடிவு என்பது ஆளுங்கட்சி முதல்வர் நிதிஷ்குமார் அவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதில் அச்சமில்லை . ஆட்சியை இழக்கும் அபாயத்தில் நிதிஷ்குமார் உள்ளார்.

பாஜக கூட்டணி ஆட்சியா, அல்லது ராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சியா என்பது தான் பீகார் மக்களின் எதிர்பார்ப்பு. விடை காண வரும் 10 ஆம் தேதி வரை காத்திருங்கள். உண்மை தெரியும்.

– கணிப்பு அக்னிமலர்கள் குழு