அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி பாஜக கட்சிக்கு மாற்றாக உருவாக்குவதற்கும் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் திமுக கழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சு0சு4 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு புதிய வியூகம் அகில இந்திய அளவில் கூட்டணி கட்சிகளை வகுத்து கூட்டணி கட்சிகளை வழிநடத்தும் முக்கிய பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு மு.க.ஸ்டாலின் தயாராகி வருகிறார். இதற்காக முழு மூச்சாக களத்தில் இறங்கி கூட்டணிகளை உருவாக்குவதற்கும் ஏற்பாடு செய்து வருகிறார். இதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனிகாகாந்தி அவர்களை சந்தித்து அதற்கான ஏற்பாட்டினை தான் செய்து வருவதாகவும் தூதர்கள் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். இதன் ஒரு பகுதியாக தான் டி.ஆர்.பாலு டெல்லியில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஏஜென்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் பொழுது காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மாநில கட்சிகள் ஒருங்கிணைத்து பாஜக கட்சியையும் பிரதமர் மோடியையும் மாற்றுவதற்கு முயற்சி செய்தால் அது சரியான அணுகுமுறையாக இருக்காது என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்பொழுது பாஜக கட்சிக்கு மாற்றாக அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை தவிர வேறு கட்சிகளை முன்னிறுத்த முடியாது குறிப்பாக மம்தா பானர்ஜி கருத்தை ஏற்பதற்கு திமுக தயங்குவதாகவும் அதை சூசகமாகவும் டி.ஆர்.பாலு அவர்கள் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி அவர்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை முன்னிலைப்படுத்தி மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி இதன் மூலம் முறியடிக்கப்படும் என்று தெரிகிறது. அதே போல் சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பும், பேச்சுவார்த்தையும் அதிருப்தியாக இருந்ததாக கூறப்படுகிறது. தெலுங்கானா முதல்வரின் கோரிக்கையையும் அவரது ஆலோசனையும் கருத்துக்களையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பது ஒன்றுதான் பிரதமர் மோடி அவர்களை நேருக்கு நேர் கூறி அனுப்பிவிட்டதாகவும் நம்பதகுந்த வட்டார தகவல் கூறிவிட்டன. காங்கிரஸ் ஆட்சியை மாற்றுவதற்கு எத்தகைய முதலாளிகள் களம் இறங்கி ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தார்களோ (கார்ப்பரேட்) அதே போன்று ஒரு முயற்சியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் தற்பொழுது மேற்கொண்டு பண முதலாளிகளை களத்தில் இறக்கிவிட்டு பாஜக கட்சியை மத்தியில் இருந்து அப்புறப்படுத்துவதற்காகவும் பிரதமர் மோடியை தோற்கடிப்பதற்காகவும் வியூகம் வகுத்து செயல்படுத்திவருவதாகவும் கூறப்படுகிறது. சு0சுசு ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சு0சு4 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பணியை மாநில கட்சிகள் தொடங்குவதற்கான ஏற்பாட்டினையும் செய்து வருவதாகவும் அத்தகைய முயற்சியை தமிழ்நாட்டில் இருந்து திமுக முன்னேடுத்து செல்வதற்கும் முதன்மை இயக்கமாக இருந்து செயல்படுவதற்கும் தன்னை இப்பொழுது இருந்தே தயார்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாண்டிச்சேரி உள்பட 40 இடங்களும் மேற்குவங்க —-உள்ள தொகுதியில் உள்ள அந்த இரண்டையும் சேர்த்தால் மொத்தம் இவ்வளவு தொகுதிகள் வரும் என்பதை கணக்குப் போட்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் மம்தாபானர்ஜி அவர்களுடன் இணைந்து பாஜக கட்சிக்கு மாற்றாக ஒரு பெரிய அளவில் வெற்றியடைய முடியும் என்று கணக்கு போடுகிறார். அதே போல் ஒடிசாவில் உள்ள நவீன் பட்நாயக் உத்திரப்பிரதேச மாநிலம் அகிலேஷ்யாதவ், மாயாவதி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் போன்றவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் திமுக கழகம் இறங்கி பணியாற்றுவதற்கு தயாராகி வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக திமுக கழகம் முன்னெடுக்கும் அரசியல் வடநாட்டு தலைவர்களை ஒருங்கிணைக்கும் பாணி இதுவரையில் வெற்றியாக தான் முடிந்திருக்கிறதே தவிர தோல்வியடைந்ததில்லை என்ற நிலை இருப்பதால் வடநாட்டு தலைவர்களும் மோடிக்கு எதிராகவும் பாஜக கட்சியும் எதிர்த்து அரசியல் நடத்திவரும் வடநாட்டு தலைவர்களும் அவரது இயக்கங்களையும் திமுகவின் வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்ளும் அப்படி ஏற்றுக்கொண்டால் நிச்சயம் வெற்றியடையும் என்றும் ஒரு நம்பகத்தன்மை ஏற்பட்டுள்ளது என்பது கடந்தகால வரலாறு. குறிப்பாக விபிசிங் பிரதமர் ஆவதற்கும், பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் பிரதமர் ஆவதற்கும் ஐக்கிய குஜரால், மன்மோகன்சிங் போன்றவர்கள் பிரதமர் ஆவதற்கு வியூகம் வகுத்து அதில் வெற்றி கண்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் என்பதும் வரலாறு. அதே போல் குடியரசு தலைவர்களை தேர்வு செய்வதிலும் திமுகவின் பங்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பங்கும் மிகப் பெரிய அளவில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே சு0சு4 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு கடுமையாக உழைப்பதற்கும் கூட்டணி வலுப்படுத்துவதற்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு மூச்சாக செயல்படுவதற்காக முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமீபத்தில் இந்தியா மருத்துவ கழகம் சமீபத்தில் பேசிய ஆளுநர் சக்தி வாய்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்றும் புகழாரம் சூட்டியதும் அதற்கு அடுத்து நாளே டெல்லி பாராளுமன்ற கூட்ட தொடரில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று திமுகவினர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதும் பாஜக கட்சியின் புகழுக்கு நாங்கள் பணியமாட்டோம் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. காந்தி குடும்பத்தின் எத்தகைய அணுகுமுறையை மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்கள் கையாண்டாரோ அதே முறையை நானும் கையாளுவேன் என்று சோனியாகாந்திக்கும் ராகுல்காந்திக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்துள்ளார்.
எனவே மம்தாபானர்ஜி கட்டுப்படுத்துவதற்கும், காங்கிரஸ் கூட்டணியில் கொண்டு வருவதற்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் முயற்சிகள் எடுப்பார் என்று அகில இந்திய காங்கிரஸ் நம்பிக்கொண்டிருக்கிறது.
– டெல்லிகுருஜி
More Stories
இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..!
அன்புமணி தாக்கு…!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்