சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், டெல்லி முத்தமிழ் பேரவை நிர்வாகிகள் மற்றும் டெல்லி தமிழ் கல்விக் கழக நிர்வாகிகள் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்கள். டெல்லியில் பணிபுரியும் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். பின்னர் பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். பின்னர் மத்திய விளையாட்டுத் துறை மந்திரியையும் சந்திக்க இருக்கிறார்.
More Stories
இந்த கரிகாலன் குறிவைக்க மாட்டான்! குறி வைத்தால் தப்பாது எம்.ஜி.ஆர் பாணியில்! எடப்பாடி பழனிசாமி..! அன்று ஜெயலலிதா கூறியதை இன்று அறிவித்துள்ளார்…!!
ம.பி.: 50,700 கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
சென்னையில் 9 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை கிடைக்கும் – வங்கி கணக்கு சரி பார்க்கும் பணி முடிந்தது