பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று டெல்லியில் சந்தித்து பேசினர்.
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அவரை எடப்பாடி பழனிசாமி, ஓபன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும், நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதித்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
- தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தினோம்.
- மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் ஆகிவிடும் என தெரிவித்தோம்.
- தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
More Stories
வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு நடைபெறுவதால் தமிழ்நாட்டில் மே 5ந் தேதி கடைகளுக்கு விடுமுறை- விக்கிரமராஜா அறிவிப்பு
தொழிலாளர்களின் நலன் காக்கும் அரசாக திமுக அரசு விளங்கும்- முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து
இந்தியா விரைவான வளர்ச்சி பெற கடின உழைப்பு நல்கிட உறுதி ஏற்போம்