கோவை: பசுமை தாயகம் சார்பில் நொய்யல் ஆற்றை மீட்டு எடுப்போம் என்ற தலைப்பில் கோவையில் கருத்தரங்கம் நடந்தது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நொய்யல் ஆற்றை மீட்க வேண்டும் என்ற நிலை வந்துள்ளது. நொய்யல் நன்றாக இருந்தால் தான் கொங்கு மண்டலம் வளர்ச்சி பெறும். ஒரு காலத்தில் நொய்யல் ஆற்றில் 4.5 லட்சம் ஏக்கர் பாசனம் செய்தார்கள். இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம். கவர்னரும், ஆளும் கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும். கவர்னர் அரசியல் செய்யக்கூடாது. அதேசமயம் அரசும் கவர்னரை மதிக்க வேண்டும். கவர்னரும் அரசியல் சாசனத்துக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள் உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்நாடா, தமிழகமா? என ஆராய்வது கவர்னரின் வேலை கிடையாது. கவர்னர் தேசிய கீதத்தில் திராவிடம் என்று வருகிறது. அதை பாடாமல் விட்டு விடுவாரா? தேசிய கீதத்துக்கு முன்பு கவர்னர் வெளியேறியது மரபுக்கு மீறிய செயல். 2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு. அதை நோக்கியே பயணிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
More Stories
இந்த கரிகாலன் குறிவைக்க மாட்டான்! குறி வைத்தால் தப்பாது எம்.ஜி.ஆர் பாணியில்! எடப்பாடி பழனிசாமி..! அன்று ஜெயலலிதா கூறியதை இன்று அறிவித்துள்ளார்…!!
ம.பி.: 50,700 கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
சென்னையில் 9 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை கிடைக்கும் – வங்கி கணக்கு சரி பார்க்கும் பணி முடிந்தது