May 24, 2022

பழமொழிக் கதைகள்

கலைமாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி

[responsivevoice_button voice=”Tamil Male”]என்னதான் நாய் நன்றியுள்ள விலங்காயிருந்தாலும் மனிதன் அதைச் சிறுமைப்படுத்தும் நோக்கில்தான் பார்க்கிறானே தவிர உயர்த்திப் பேசினானில்லை. காரணம்? அதன் குணம். அதுவும் மாறாத குணம். நன்றியை யாருக்குக் காட்டுகிறது அந்த நாய்? தன் இனத்தில் ஒன்றே தனக்குதவி செய்தாலும் அதனைப் பகைக்கும். தன் இனமற்ற மனிதனை எஜமானாக்கி, அவன் சொன்னதையெல்லாம் கேட்டு, காவல் காத்து, மோப்பம் பிடித்து மோசம் போகிறது. தன் இனத்தைக் கண்டால் குரைக்கவும், கடிக்கவும், பகைக்கவும் குணமாகக் கொண்டதால் நாய் இந்த இழிவு நிலைக்குப் போயிற்று. அவ்வளவு தான். மற்றபடி நாய் நல்ல பிராணிதான், நம்மை அண்டி வாழ்வதால் கதைக்குள் போகலாமா? இராஜா & இராணி. ஒரே மகன் இளவரசன். நாளை பட்டத்துக்கு வரவிருப்பவன். திருமண வயது வாலிபன். அழகும் குணமும் நிறைந்தவன். ஏழை&எளியோர், வலியோர்& முதியோர் என்று வேறுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் அன்பு காட்டுபவன். தன் நாட்டில் ஏழைகளே இருக்கக் கூடாது என்ற கொள்கையுடையவன். ஒருநாள் வீதி வழியே குதிரை வண்டியில் வந்து கொண்டிருந்த இளவரசனின் கண்ணில் ஒரு
பழமொழிக் கதைகள் கலைமாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி
பிச்சைக்காரி தென்பட்டு விட்டாள். இளவயது மங்கை. இளவரசன் வண்டியை நிறுத்தி, அவளையே வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தான். காரணம் அவள் பிச்சைக்காரியாக இருந்தாலும் அளவற்ற அழகாக இருந்தாள். இயல்பாகவே ஏழையின்பால் இரக்கமுள்ளவ-னாதலால் அப்பிச்சைக்காரி, இளவரசனுக்கு இன்னும் அழகாகவே தெரிந்தாள். அவளைத் தன் அருகே அழைத்தான். பெயரையும் ஊரையும் கேட்டான். சொந்த பேரைச் சொன்னவளுக்குப் பிறந்த ஊரைச் சொல்ல முடியவில்லை. இரக்கம் காதலாக மாறியது இளவரசனுக்கு. மணந்தால் இவளைத்தான் மணக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டான். தன்னுடன் அந்தப் பிச்சைக்காரியையும் அரண்மனைக்கு அழைத்து வந்தான். தன் விருப்பத்தைப் பெற்றோரிடம் சொன்னான். மன்னருக்குத் தூக்கிவாரிப் போட்டது. தன் மகன் இளவரசனைப் பார்க்கும் போது புன்னகையும், பெருமிதமும், பாசமும் வருகிறது மன்னருக்கு. அடுத்து அந்தப் பிச்சைக்காரியைப் பார்க்கும் போது உதடுகள் பிதுங்கி, முகம் கருத்து, வெறுப்பும், வேதனையும், ஆத்திரமும் வருகிறது. மகனைத் தனியே அழைத்து எவ்வளவோ
எடுத்துச் சொன்னார் மன்னர். காதலில் விழுந்த இளவரசன் எழுந்திருப்பானில்லை. தன் முடிவில் உடும்புப் பிடியாய் இருந்தான். அப்பிச்சைக்காரிக்காக இளவரசன் என்கிற உரிமையையும், அரண்மனை சுகவாசத்தையும், பெற்-றோரின் பாசத்தையும் இழக்கத் துணிந்துவிட்டான். ‘காதலுக்குக் கண்ணில்லை’ என்று இதைத்தான் சொன்னார்களா? “கண் இருப்பதால்தானே இந்தக் காதலே பிறக்கிறது.” “அப்படியானால் காதலுக்குக் காரணம் கண்கள் தானா?” “கண்கள் மட்டுமல்ல பெண்களும்தான்.” “காதலித்தல் பாவமென்றால் கண்களே பாவமன்றோ? கண்களே பாவமென்றால் பெண்களே பாவமன்றோ! பெண்களே பாவமென்றால் மன்னவரின் தாய் யாரோ?” என்ற திரையிசைப் பாடல் இதற்கு
விடையளிக்கிறதே. எந்த நிலை வந்தாலும் இந்த நிலையிலிருந்து இளவரசன் மாறுவதாகத் தெரியவில்லை. பிச்சைக்காரியைக் குளிப்பாட்டி நன்கு சிங்காரித்து அழைத்து வருமாறு அரண்மனைப் பெண்களுக்கு உத்தரவிட்டார் மன்னர். அரைமணி நேர அலங்காரத்தில் பிச்சைக்காரி பேரழகியானாள். மன்னருக்குத் தன் கண்ணைத் தன்னாலேயே, நம்ப முடியவில்லை. இளவரசன் இவளழகில் மயங்கியதில் வியப்பேதுமில்லை. சிவப்பு நிறம், சிங்கார முகம். ஓர் இளவரசிக்கு- உண்டான தரம், தன் மகனுக்குக் கிடைத்த வரம். ஆனால் இது மட்டும் போதாதே! இவள் கல்வியறிவு அற்றவளாச்சே! உயர் குடியில் பிறக்காதவளாயிற்றே! சாதகமாகப் பலவும் பாதகமாகச் சிலவும் இருப்பதால் சாதகமாகவே சொன்னார். “திருமண ஏற்பாடுகள் தொடங்கட்டும்.” இளவரசனுக்குண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. திருமண ஏற்பாடுகள் மும்முரமாய் ந ட ந் த ன . அ ¬ ன த் து « த ச த் து இராஜாக்களும் குவிந்தனர். நவரத்தினங்களால் மணப்பெண் அலங்கரிக்கப்பட்டாள். பிச்சைக்காரி உச்சக்காரியாகிவிட்டாள். திருமணம் முடிந்து, சாந்தி முகூர்த்த ஏற்பாடுகள் துவங்கின. இளவரசன் முகத்தில் எப்போதுமில்லா உற்சாகம் தெரிந்தது. மூன்று மாதங்கள் கடந்தன.பிச்சைக்காரி, இல்லையில்லை இளவரசியின் உடம்பு இளைத்துக் கொண்டே போனது. அரண்மனை மருத்துவன் அழைக்கப்பட்டான். நாடிப் பிடித்து நடந்ததைச் சொன்னான். “மன்னா! இளவரசி சரியாகச் சாப்பிடாத காரணத்தால் இளைத்துவிட்டார்கள். விரும்பிய உணவு கொடுத்து நன்றாகச் சாப்பிடச் செய்யுங்கள். இதுதான் மருந்து!” என்று கூறி புறப்பட்டான். ஏன் சாப்பிடவில்லை? யாருக்கும் தெரியவில்லை! அருகிலிருந்து ஊட்டிவிட்டாலும் ஒரு வாய்ச் சோறு உள்ளே போகமாட்டேன் என்கிறது. ஏன் சாப்பிட மறுக்கிறாய்? ஏன் உணவை வெறுக்கிறாய்? மன்னர் கேட்டார். எந்தப் பதிலும் இளவரசியிடமிருந்து வராததால் அரண்மனை மனநல மருத்துவர் அழைக்கப்பட்டார். மனநல மருத்துவர் இளவரசியிடம் தனிமையில் பேசிக் காரணத்தைக் கண்டறிந்தவராய் வெளியே வந்து மன்னரின் காதில் ஏதோ சொன்னார். அடுத்த நாளிலிருந்து இளவரசிக்கு வாயும் வயிறும் நிறைந்தது. உடம்பு பழையபடிக்குப் பெருத்தது. இரண்டே மாதத்தில் இளவரசிக்குண்டான தோற்றம் தெரிந்தது. இது எப்படி நடந்தது? மனநல மருத்துவரிடம் கேட்டனர் மக்கள். அவள் சாப்பிடும்போது மறைந்திருந்து பார்க்குமாறு சொன்னார் மருத்துவர். அவ்வாறே மறைந்திருந்து பார்த்தால் அங்கே… அவளுடைய அறையில் நான்கு மூலைகளிலும் அவளுக்கென சாப்பாடு பிரித்து வைக்கப்பட்டிருந்ததையும், இவள் அதனருகே சென்று, “அம்மா! பிச்சைப் போடுங்க தாயே!” என்று கூவிக் கூவி சோற்றை ஒரு பாத்திரத்தில் எடுப்பதும், பின்பு ஒரு மூலையில் அமர்ந்து சோறு, குழம்பு, கூட்டு, பொரியல் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பெரிய உருண்டைகளாய் உருட்டித் தின்பதையும் கண்டனர். அடக்கடவுளே! இதுதானா சங்கதி?இந்த நேரத்தில் கூட்டத்தில் ஒருவன் சொன்னான். “நாயைக் குளிப்பாட்டி நடு ஊட்ல வச்சாலும் அது வால ஆட்டிக்கிட்டு வாயால நக்குமாம்“ அவன் சொன்னதில் ஏதேனும் தவறுண்டா? சிலரைத் திருத்தவே முடியாது. தானாகத் திருந்தினால் உண்டு. சரி! அதுக்கு நாமதான் என்ன செய்ய முடியும்? இத்துடன் கதை முடியும்! [/responsivevoice]