ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள குட்லக் சகி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை குதுகலப்படுத்தி இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார்.
விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த ஆண்டு ஜூன் மாதமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா அச்சுறுத்தலால் டிசம்பர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
பிறகு டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்த்த இப்படம் தேதி குறிப்பிடமால் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், இப்படம் வரும் ஜனவரி 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிற்து. இந்நிலையில் குட்லக் சகி படத்தின் டிரைலரை வெளியிட்டு கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை குதுகலப்படுத்தி இருக்கிறது அப்படக்குழு. இதனை சமூக வலைத்தளத்தில் அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
More Stories
லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை
அயலான் டீசர் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்… ஏலியன்ஸுடன் சிவகார்த்திகேயன் கொடுத்த அப்டேட்
ஜெயிலர் வெற்றி.. காரை பரிசாக வழங்கிய கலாநிதி மாறன்