November 3, 2024

நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவின் நிலை! அனைத்து கட்சி கூட்டம்! தீர்வுக் கிடைக்காத தீர்மானம்!!

கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனைத்துக்கட்சி ஆதரவுடன் ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது அப்போதைய தமிழ்நாடு அரசு. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஆளுநரிடம் அழுத்தம் கொடுத்துப் பார்த்தார். பிறகு ஒருவழியாக ஜனாதிபதிக்கு அந்த கோப்பு அனுப்பப்பட்டு அது திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அந்த தகவலை அப்போதைய மருத்துவதுறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மறைத்துவிட்டதாக கூறி உண்மையை போட்டு உடைத்தது எதிர்கட்சியான திமுகவும், அதன் தலைவராக மு.க.ஸ்டாலினும். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதற்கிடையில் தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டார். -புதிய ஆளுநராக ரவி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். மாநில ஆளுநரை சந்தித்து இரண்டு முறை நீட் தேர்வு விலக்கை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் மு.க.ஸ்டாலின்.

ஆனால் அதற்கு செவிசாய்க்காத ஆளுநர் குடியரசு தலைவருக்கு கோப்பினை அனுப்பி வைப்பதில் முடிவினை மேற்கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை நேரில் சந்தித்து நீட் விலக்கு விவகாரம் குறித்து அழுத்தம் தருவதற்காக முயற்சி செய்த பொழுது மத்திய உள்துறை அமைச்சகம் மாநில ஆளுநரிடம் விளக்கம் கேட்டு உரிய பதிலை பெற்றுக்கொண்டப் பின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்திப்பதற்கு அணுகிய பொழுது நீட் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும் பொழுது மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்ததினால் எந்தப் பயனும் ஏற்பட போவதில்லை என்ற நிலையில் டி.ஆர்.பாலு தலைமையில் வந்த நாடாளுமன்ற உறுப்பினரை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்துவிட்டார் என்ற செய்தி ஊடகங்கள் மூலமாகவும், தொலைக்காட்சி பேட்டி மூலமும் திமுக தரப்பில் பகிரங்கப்படுத்தப்பட்டது. மேலும் சென்று மாநில ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று டி.ஆர்.பாலு பேட்டியளித்தார். இதற்கிடையில் சமீபத்தில் கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் புபு0 விதியின் கீழ் முதல்வர் அறிக்கை வாசித்து நீட் தேர்வு- விலக்கு குறித்து ஆளுநரின் மௌனத்தை கலைப்பதற்காக கலாதாமத்தை விரைவுப்படுத்துவதற்காகவும் சட்டமன்ற அனைத்துக் கட்சி உறுப்பினர் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி கடந்த 8ஆம் தேதி சு0சுசு ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சிகளும் நீட்தேர்வுக்கு ஆதரவாக மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்கள் ஆதரவை தருவதாக கூறியது. அனைத்துக் கட்சி தீர்மானத்தை ஏற்க மறுத்த பாஜக கட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறி தீர்மானத்தை எதிர்த்தது. நீட் தேர்வு குறித்த நிதிமன்றம் உத்தரவு அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வுக்கு தங்கள் மாநில மருத்துவ மாணவ மாணவிகளை தயார் செய்து நீட் தேர்வை எதிர்க்கொண்டு வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு உண்மை தன்மையை வெளியிடாமல் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் நீட் தேர்வுக்கு ரத்து என்ற விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு சமூக நிதியை நிலைநாட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நீட் தேர்வு ரத்து கிடைத்தால் திமுக வாக்குறுதி நிறைவேற்றப்படும். விலக்கு கிடைக்கவில்லையென்றால் எதிர்கட்சிகளின் நிலை திமுக மீது கடும் விமர்சனத்தை முன்வைக்க உதவும். நீட் தேர்வு ரத்து என்பது திராட்சை தோட்டத்தில் சென்று திரும்பிய நரி சீ… சீ… இந்த பழம் புளிக்கும் என்று தான் நினைவுப்படுத்துகிறது. ஒருவேளை இந்த ஆண்டு நீட் தேர்வு விலக்கு பெறவில்லையென்றாலும் தொடர்ந்து நீட் தேர்வு பெறவதற்கான முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதாக கூறினாலும் அதற்கு அனைத்து கட்சி ஆதரவு நிலை இருந்தாலும் விலக்கு கிடைக்குமா என்று முயற்சித்து தான் பார்க்க வேண்டும்.

– டெல்லிகுருஜி