December 6, 2024

தேர்தல் முடிவும் கோஷ்டி மோதலும் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தும்!

மே 2 ஆம் தேதி வெளியாகும் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுக அணிக்கு மிகப் பெரிய அளவில் தோல்வியை ஏற்படுத்தும் என்று தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக்கணிப்பும் வாக்குப் பதிவுக்கு பின் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பும் தெளிவாக தெரிகிறது. அதிமுக ஆட்சியை இழக்கும் அதிக இடங்களில் தோல்வியை சந்திக்கும் என்பது ‘கூடா நட்பு கேடா முடியும்‘ என்பது போல் கூட்டணி கட்சிகளால் இட பங்கீட்டுகளால் ஏற்பட்டுள்ள குழப்பம் சர்ச்சை, பாஜக கட்டுப்பாட்டில் ஆட்சி நிர்வாகம் செயல்படுகிறது என்ற பரவலான தகவல் அதற்கு ஏற்றாற்போல் முதலமைச்சர் எடப்பாடியும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வமும் மற்றும் அமைச்சர் தங்கமணி, அமைச்சர் வேலுமணி ஆகியோர் கட்சிக்குள் செலுத்தி வந்த அதிகாரம் மத்திய அரசுக்கு தலையாட்டி பொம்மைகளால் தமிழ்நாட்டின் நலம் சார்ந்த விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக செயல்படாமல் மாநில மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்து தங்கள் பதவிகளை காப்பாற்றி கொள்வதில் தங்கள் துறை சார்ந்த இலாக்காகளில் எவ்வாறு ஆதாயம் அடையளாம் என்று கணக்குப் பார்த்து திட்டமிட்டு நேரடியாக ஈடுபட்டு அரசின் கஜனாவை காலிசெய்து மக்களின் நன் மதிப்பை இழந்து கூடவே கட்சியினருடைய ஆதரவையும் இழந்து தங்கள் விருப்பம் போல் தேர்வாளர்களை தேர்வு செய்து கொண்டு வேண்டியவர்களுக்கு சலுகைகளுடன் உதவி செய்வது வேண்டாதவர்களை குறைத்து மதிப்பீடுவது போன்ற பல்வேறு விஷயங்களிலும் இவர்களின் ஆதிக்கம் அதிகாரம் முதலமைச்சரையும் கடந்து கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்ப்பை சம்பாதிப்பதற்கு காரணமாய் அமைந்து விட்டது.

கூடவே முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் பொழுதே அடுத்த முதல்வர் யார் என்பதை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கி ஒபிஎஸ் உள்பட பலரை வற்புறுத்தி எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று கட்சியினர் மத்தியில் பிரபலப்படுத்தியது பெரும்பாலான அதிமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செய்தியாக்கப்பட்டுள்ளது. இதனால் தெற்கு தமிழகம் மேற்கு தமிழகம் வடக்கு தமிழகம் மூன்றிலும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு மிகப் பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்துவதற்கு காரணமாகி விட்டது.

மேலும் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக நினைத்து பாஜக கட்சியுடன் இணைந்து மீண்டும் அதிமுகவில் சேர வேண்டும் என்று சமாதான தூதுவர்கள் மூலம் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் எடப்பாடி பழனிசாமி அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி கட்சியினர் மத்தியில் சசிகலாவின் ஆதரவை முழுமையாக இழந்து விட்டார்.

இதுமட்டும் அல்ல அரசியலில் இருந்து நான் ஒதுங்கி கொள்கிறேன் என்று அறிவித்து திமுக தான் எனது எதிரி என்று அடையாளம் காட்டி திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவி செய்துள்ளார். அதற்கு ஏற்றார்போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நடத்திவரும் தினகரன் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றி இருவரும் இணைந்து நான்காவது அணியாக தேர்தலில் போட்டியிட்டு அதிமுகவின் வாக்குகளை சிதறிடித்து விட்டார்கள். இதனால் கடந்த பு0 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக ஆட்சியை கைப்பற்றுவதற்கான அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கட்சியின் வாக்கு வங்கியையும் தோழமை கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஆளுங்கட்சியின் எதிர்ப்பு வாக்குகளையும் தங்கள் அணிக்கு சாதகமாக உருவாக்கி திமுக மாபெரும் வெற்றியை பெறுவதற்கு அதிமுகவினர்களே காரணமாகி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு கட்சியினரால் பகிரங்கமாக எழுப்பப்படும். கடுமையான விமர்சனங்களோடு போட்டி கூட்டங்களும் கோஷ்டிகளுக்கு ஆள் சேர்ப்பதும் கட்சியை யார் கைப்பற்றுவது என்ற ஆலோசனைகளும் பரபரப்பாக பேசப்பட்டு கட்சிக்குள் உச்சக்கட்ட மோதல், பிளவு வெடிக்கும் ஆபத்து அதிமுகவிற்கு உள்ளது. மீண்டும் கட்சியை புணரமைத்து 5 ஆண்டுகளுக்கு வழிநடத்தி தொண்டர்களின் நன்மதிப்பை பெறுவதற்கு பிளவு-ப்பட்ட இயக்கத்தை ஒன்றிணைப்பதற்கும் புதிய முயற்சிகள் மூலம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா என்ற முழக்கம் அதிமுக கட்சிக்குள் அதிக அளவில் ஒலிக்க தொடங்கும். அந்த சூழ்நிலையில் சசிகலா என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் கூடவே எழுப்பப்படும்.
& டெல்லிகுருஜி