சென்னை எம்.ஆர்.சி. நகர் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், கலை உலகை சார்ந்தவர்கள் பத்திரிகையாளர்கள், நண்பர்கள் என்று பலதரப்பட்ட பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி சீமான், பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் இல.கணேசன், நைனார் நாகேந்திரன், கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு, தனுஷ், சிவகார்த்திகேயன், உள்பட பலரும் மணமக்களை வாழ்த்திய முக்கிய பிரமுகர்கள். டி.டி.வி தினகரனின் சகோதரர் பாஸ்கரின் மகள் ஜெயஸ்ரீக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் டாக்டர் ஜெய்ஆனந்துக்கும் மன்னார்குடியில் திருமணம் நடைபெற்றது. அதன் வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை திவாகரன் அவர்களது துணைவியார் லதா திவாகரன், டாக்டர் விக்ரம், டாக்டர். ராஜா மாதங்கி ஆகியோர் வரவேற்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முக்கிய சிறப்பம்சமாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
More Stories
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்கும் பச்சை வால் நட்சத்திரம்
வரித்தலை வாத்து முதன்முறையாக முட்டுக்காடு ஏரிக்கு வருகை- பறவை ஆர்வலர்கள் நெகிழ்ச்சி
சூரியனின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்த சீனா