December 8, 2023

திரௌபதி திரைப்படம் யாருக்கு ஆதரவு!

திரௌ

திரௌபதி திரைப்படம் யாருக்கு ஆதரவு!

[responsivevoice_button voice=”Tamil Male”]யாருக்கு எதிர்ப்பு! ரசிகர்களின் முடிவு! சினிமா என்பது ரசிகர்களின் விருப்பத்தைப் பொறுத்து அல்லது திரைப்படம் பார்ப்பவர்களை பொறுத்து எடுக்கப் பட வேண்டிய முடிவு, விமர்சனம்! ஒரு சாதியை உயர்த்தியும், ஒரு சாதியை தாழ்த்தியும் எந்த ஒரு திரைப்படமும் எடுப்பதில்லை. சினிமா என்பது இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை ஒரு திரையில் ஒரு கதையை சொல்வது. பார்ப்பவர்கள் சிரித்து மகிழ்வதும், சிந்திந்து ஏற்றுக் கொள்வதும் அவரவர்கள் விருப்பத்தின் முடிவு ஆகும். சினிமாவில் அரசியல் புகுத்தப்படலாம். அரசியலை சாதியாக பார்க்கக் கூடாது. வெற்றித் தோல்வி என்பது சாதி அமைப்பை தாண்டி நிர்ணயம் செய்வது அல்ல. பெரும்பான்மையான மக்களின் விருப்பமே திரைப்படமாக ஆனாலும் சரி அரசியல் ஆனாலும் சரி வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கு சினிமாவை பொறுத்த வரை ரசிகர்கள் என்றும், அரசியலை பொறுத்த வரை வாக்காளர்கள் என்றும் கணக்கிடப் படவேண்டும். ஆனால் தொடர்ந்து சலுகைகளை பெற்றுவரும் ஒரு சாரருக்கு (சாதி) சாதகமாக சினிமாவாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் இருவேறு கருத்துக்களை கொண்டு பார்ப்பது, பார்ப்பதும் விமர்சனம் செய்வதும், தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காதல் இளவரசன் கமலஹாசன், இளைய தளபதி விஜய், தல அஜித், கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஆகியோர் பல திரைப்படங்களில் கதை களத்திற்கு ஏற்ப ஒரு பகுதி தலித் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி, எஸ்.டி), மீனவர், தேவர், வன்னியர், முதலியார் போன்ற சாதியை குறிக்கின்ற சாதியை முன்னிலைப்படுத்துகின்ற கதாபாத்திரங்களை ஏற்று கதாநாயகர்களாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர், பேரறிஞர் அண்ணா , வேலைக்காரி என்ற திரைப்படத்தின் மூலம் இரண்டு ஒரு பெரும்பான்மை சாதியை சார்ந்த ஒரு பெண் மிக குறைந்த எண்ணிக்கையை சேர்ந்த முதலாளி வீட்டில் வேலை செய்வதாக ஒரு திரைப்படம் கதை வசனம் எழுதி வெளிவந்துள்ளது. அதே போல் மதரீதியாக இந்து, முஸ்லீம், கிறிஸ்து, சீக்கியர், போன்ற மத அடையாளங்களை குறிக்கும் கதாபாத்திரங்களிலும் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. மொழி ரீதியாக பார்த்தால் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், எந்த சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் கதாநாயகனாக இருப்பவர்களை திரைப்பட நடிகர்களாக மட்டுமே எல்லோரும் பார்த்தார்கள். அது ஒரு காலக்கட்டம். தற்பொழுது கடந்த ஆண்டுகளில் வெளிவந்த ஒரிரு திரைப்படங்கள் அட்டக்கத்தி, பரியேறும் பெருமாள், அசுரன், காலா போன்ற திரைப்படங்களில் நடித்த கதாநாயகர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் மூலம் ஒருவிதமான குறிப்பிட்ட அடையாளங்கள் வெளிப்பட்டு உள்ளது. அசுரன் திரைப்படத்தை பார்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தான் தற்பொழுது தயாராகி வெளியிடுவதற்கு தயாராக உள்ள திரைப்படம் “திரௌபதி” இந்த படம் பட்டாளிமக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் கூறுவதை போல் “நாடக காதல்” உயர்சாதி பெண்களை திருமணம் செய்துக் கொண்டு பேரம் பேசி காசுபறிக்கும் கூட்டத்தை குறித்து நீதிமன்றம் தெரிவித்த பதிவு துறை மூலம் நடைபெற்ற பதிவு திருமணம் குறித்து (அந்த நீதிமன்றம்) தெரிவித்த கருத்தின் அடிப்படையில் கரு உருவாக்கி கதைக் களம் அமைத்து இயக்குனர் மோகன் என்பவரால் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் திரௌபதி என்ற சினிமா படம். இந்த திரைப்படத்தை வாட்ஸ் அப், பேஸ் புக், இன்டர்நெட், யூ டுப், போன்ற பயா மீடியாக்களில் மூலம் (டிரைய்லர்) திரௌபதி படக் காட்சிகள் வெளியிடப்பட்டு அதை லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் பார்த்து பாராட்டுகிறார்கள். இந்த பாராட்டுகள் அனைத்தும் பெண்களுக்கு இந்த திரைப்படத்தின் மூலம் ஒருவிதமான பாதுகாப்பும் பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு அறிவுரையும் கூறப்பட்டுள்ளது என்று பாராட்டி மகிழ்கிறார்கள். ஒருசில அரசியல் இயக்கங்களை சேர்ந்தவர்களும் சமூக சேவை செயற்பாட்டாற்களும் தங்கள் கருத்துக்களை வெளியிடாமல் இருப்பதும் ‘பெரியார் திராவிடர் கழகம்’ போன்ற இயக்கங்கள் சென்னை மாநகர காவல் ஆணையரிடத்தில் திரௌபதி திரைப்படத்தை தடைசெய்யக் கோரி மனு கொடுப்பதும் நடைபெறுகிறது. திரைப்பட இயக்குனர் மோகன் ஜி திரைப்படத்தை வெளியிடுவதற்கு மத்திய தணிக்கை துறை சான்று பெற்றுவிட்டார். தியேட்டர்களில் திரைப்படம் வெளியிடுவதற்கு நான் தயாராகி இருக்கிறேன் அதேநேரம் யூடுப் மூலமும் திரைப்படத்தை டவுன்லோடு செய்து தாராளமாக பார்க்கலாம் என்று அறிக்கை வெளியிட்டு விட்டார்.[/responsivevoice]