கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் தரிசனங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கொரோனா விதிமுறைகளின்படி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ரூ.300 கட்டணத்தில் விரைவு தரிசனம், இலவச தரிசனம், வி.ஐ.பி. பிரேக் உள்ளிட்ட தரிசனங்களில் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த பிரம்மோற்சவ விழாவிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசனம், திருமலையில் வழங்கப்பட்டு வரும் சிறப்பு முதன்மை தரிசனங்களாக கருதப்படும் மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கான தரிசனங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை.
ஆனால் சமூக வலைதளங்களில் அவற்றை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அது உண்மை இல்லை. எனவே பக்தர்கள் அவற்றை நம்பி திருமலைக்கு வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 27,482 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 11.565 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.72 கோடி உண்டியல் வசூலானது.
More Stories
உலகின் இளம் வயது ஆடிட்டர் நந்தினி அகர்வால் – கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்:
சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்
ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணை கப்பலை வியட்நாமுக்கு பரிசளித்த இந்தியா