December 6, 2024

திரிசங்கு சொர்க்கத்தில் வன்னியர்களின் உள்ஒதுக்கீடு (10.5%)

நந்தவனத்தில் ஒரு ஆண்டி நாலு ஆறு மாதமா குயவன வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி!
அதை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தான்டி.
– கடுவிழி சித்தர்

என்ற பாடலுக்குக்கேற்ப பழம் நழுவி பாலில் விழுந்தது போல் வன்னியர்களுக்கு 10,5% உள்ஒதுக்கீடு கிடைத்ததை கண்டு அந்த சமுதாய மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதை போல் ஆறுமாத காலத்திற்குள் அந்த உள்ஒதுக்கீடுக்கு வந்த மாபெரும் சோதனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மூலம் வழங்கப்பட்ட தீர்ப்பினால் ஆனந்தம் அடியோடு நொருங்கி விட்டது. கல்வி வேலைவாய்ப்பில் 100/10.5% இடம் கிடைப்பது உறுதி என்று காத்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியில் சம்மட்டியால் அடித்தது போல் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும் சில தன்னார்வலர்களும் உச்சநீதிமன்றத்தில் சில மேல்முறையீடு செய்துள்ளார்கள். அதன் மூலம் ஒரு நம்பிக்கை ஒளி மீண்டும் வன்னியர்களின் மனதில் துளிர்விட்டது. அதற்கும் தற்பொழுது உச்சநீதிமன்றம் வழக்கை ஏற்றுக்கொண்டு விரைவாக வழக்கை முடிப்பதற்கு ஏற்றார்போல் பிப்-15 அல்லது 16 2022 ஆண்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

இதன்படி கடந்த அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டு மேல்முறையீட்டில் நிலுவையில் இருக்கும் பொழுது இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் புதிய ஆட்சியாளர்கள் போட்ட ஆணை மூலம் பொறியியல் கல்லூரிகளில் எம்.பி.சி.(பி) 10.5% உள்ஒதுக்கீட்டுப்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்து உள்ள நிலையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறாத நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு மாநில அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்த நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை பட்டியலில் 10.5 சதவிகித உள்இடஒதுக்கீடு நிரப்பப்படுவதற்கு வாய்ப்பில்லை என்ற தகவல் சுமார் 600 மாணவர்களுக்கு இந்த ஆண்டு வன்னியர் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படலாம் என்ற செய்தி அதிர்ச்சியை தருகிறது. ஒருவேளை உச்சநீதிமன்றம் மருத்துவர் மாணவர் சேர்க்கையில் தடையின்றி நடத்துவதற்கு மாநில அரசுக்கு அனுமதி வழங்கி 10.5% உள்ஒதுக்கீடு இடங்களை நிரப்பப்பாமல் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கவில்லை என்பது கருத்தில் கொள்ளவேண்டும். அதே போல் வேலைவாய்ப்புகளிலும் உச்சநீதிமன்ற நிலைப்பாடு எத்தகைய அணுகுமுறையை கையாள வேண்டும் என்று மாநில அரசுக்கு வழிகாட்டுதல் நெறிகளை வழங்கியிருந்தால் அதனை வரவேற்று மகிழ்ந்திருக்கலாம்.

கடந்த காலங்களில் இந்த உள்ஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு எந்த தடையும் இல்லை. அத்தகைய ஒதுக்கீடு செல்லும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் மாநில அரசு இதற்குப் பிறக உச்சநீதிமன்றம் வழக்கை இரண்டு மாதத்திற்கு தள்ளிவைத்தப் பின் எத்தகைய நடைமுறையை கையாளப்போகிறது என்ற கேள்வி வன்னியர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பையும் ஆவலையும் அதிகரித்துள்ளது.

பு0.5% உள்இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு கிடைக்கக் கூடாது என்று அதற்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் உச்சநீதிமன்றத்தின் தகவலை கேட்டு ஆனந்தம் அடையலாம். மகிழ்ச்சி அடையலாம் வன்னியர்களுக்கு எதிராக நாங்கள் வெற்றிப்பெற்று விட்டோம் என்று கூக்குரல் எழுப்பலாம். அவர்களுக்கு அது நிரந்தரமானது அல்ல என்பதையும் வெற்றி என்பதனையும் விரைவில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்பொழுது முறியடிக்கப்படலாம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு எதிரிகளை அடக்கி வாசிப்பதே அறமாகும்.

வெற்றியை நினைத்து வீராப்பு பேசினால் வன்னியர்கள் உள்ஒதுக்கீடை எவ்வாறு பெறுவது என்பது சட்டத்தின் துணைக்கொண்டு அரசியல் அணுகுமுறை மூலம் தனி உள்ஒதுக்கீடை அடைந்தே தீருவார்கள் என்பது போக போகத் தான் தெரியும். 10.5 என்பது ஆரம்பம் 20 சதவிகிதம் என்பது இலக்கு இவற்றை எட்டிப் பிடிக்கும் வரை வன்னியர்களுக்கு அமைதி வழியில் அடைந்தே தீருவார்கள். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தற்பொழுது உள்ள நிலையில் வன்னியர்களின் 10.5 இடஒதுக்கீடு என்பது திரிசங்கு சொர்க்கத்தின் நிலையே ஆகும்.

வன்னியர்களை ஒருங்கிணைப்பதற்கும் இளைஞர்களை வழிநடத்துவதற்கும் அரசியலை கைப்பற்றுவதற்கும் விரைவில் வரவிருக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தரும் என்பது நன்மைக்கே. சுபு உயிர்களை பலிகொடுத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்ற தனி உள்ஒதுக்கீடு என்பதை தட்டி பறிக்கும் பொழுது வீட்டில் இருப்பவர்கள் உறங்கி கொண்டிருக்க மாட்டார்கள். விழித்தெழுந்து வெற்றியை அடைந்தே தீருவார்கள்.

  • டெல்லிகுருஜி