திமுக ஆட்சியில் 100 நாள் சாதனையாக இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000, முதியோர் உதவித்தொகைக்கு நிதி ஒதுக்கீடு, வேளாண்துறைக்கு தனி பட்ஜெட், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு மானியம், ஊக்கத்தொகை, விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு கடன் வழங்குதல், மகளிர் பேறுகாலத்தில் புசு மாதம் விடுப்பு-, பேருந்தில் கட்டணம் இல்லா பயணம் கொடிய நோய் கொரனாவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இப்படி பல திட்டங்களை நிதிநிலை அறிக்கையும் வெளியிட்டு வாகன ஒட்டிகளுக்கு பெட்ரோல் விலை ரூ.3 குறைத்தது, பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது, கொரனா நிவாரண நிதியாக வறுமை கோட்டிற்கும் கீழ் உள்ளவர்களுக்கும், வசதியானவர்களுக்கு வழங்கியது, போன்ற நல்ல திட்டங்களை இந்த பு00 நாட்களில் வழங்கியது, குறிப்பாக மகளிர் சுயஉதவிக் குழு கடனை முற்றிலும் ரத்து செய்தது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி பாராட்டியும் மகிழத்தான் வேண்டும். பு0.5 சதவீதம் வன்னியர் இடஒதுக்கீட்டை உறுதி செய்ததும் பாராட்டுக்குரிய விஷயமாகும். இருந்தாலும் நிதி நெருக்கடியில் தமிழகம் தத்தளித்து கொண்டிருக்கும் பொழுது நிதிநிலை அறிக்கையின் தீர்வுக்கான வழிகளை கண்டறிந்து கடன் சுமையில் இருந்து தமிழகத்தை மீட்டெடுப்பதற்கான புதிய பாதையில் இந்த அரசு பயணிக்க வேண்டும் என்றும் அனைவரும் விரும்புகிறார்கள்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு அரசு கஜானாவை கொள்ளையடித்தவர்களிடம் இருந்து மக்கள் பணத்தை திரும்ப அரசு கஜனாவிற்கு கொண்டு வருகின்ற வேலையையும் இந்த அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பு ஆகும். குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடைய தற்போதைய செயல்பாடுகளும் திட்டமும் அவரது அமைச்சர் சகாக்களின் செயல்பாடுகளும் முதல்வருக்கும் இந்த ஆட்சிக்கும் நல்லப் பெயரை பெற்றுத்தந்து தமிழகம் வளர்ச்சிப் பாதையில் முன்னணியில் எடுத்து செல்வார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
குறிப்பாக மறைந்த முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களின் மறைவு செய்தி கேட்டு விரைந்து வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியது முதல்வரின் பெருந்தன்மையையும் அவர் மீது வன்னிய மக்களுக்கு புதிய நம்பிக்கையையும் தோற்றிவித்துள்ளது.
& டெல்லிகுருஜி
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…