April 19, 2024

திடுக்கிட வைக்கும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு

[responsivevoice_button voice=”Tamil Male”]தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் நிகழ்வதாக அவ்வப்போது புகார்கள் எழும்.  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதெல்லாம் கிடையாது என்று மறுப்பார்கள். ஆனால் குருப்&4 தேர்வில் நடந்துள்ள முறைகேடு அம்பலமாகி, நாட்டையே அதிர வைத்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பதவிகளில் 9 ஆயிரத்து 398 காலி பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தேர்வு நடத்தியது.16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி தரவரிசை பட்டியலுடன் வெளியானது. இந்த தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் எழுதிய 39 பேர் இடம் பிடித்து இருந்தனர்.

தேர்வு எழுதியோர் வேறு வேறு மாவட்டங்களை சேர்நதவர்கள் என்பதால், அதிகாரிகளக்கு லேசாக சந்தேகம் ஏற்பட்டது. இரண்டே தேர்வு மையங்களில் எழுதியோர் “டாப்&39” இடத்துக்குள் வந்தது அவர்களின் சந்தேகத்தை அதிகரிக்கவே, பல்வேறு மாவட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த இரண்டு மையங்களிலும் மொத்தம் 99 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 39 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விசாரணையில் 99 பேரும் இடைத்தரகர்கள் உதவியுடன், அதிகாரிகள் துணையுடன் முறைகேடாக தேர்வு எழுதியது கண்டுப்பிடிக்கப்பட்டது. ஒவ்வொரு தேர்வம் (கேண்டிடேட்) 15 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்துள்ளனர். தரகர்கள், அதிகாரிகள் இதனை பகிர்ந்து கொண்டுள்ளனர். கீழக்கரைக்கு மற்றும் ர £மேசுவ ரத்தில் உள்ள தேர்வு அதிகாரிகள் , இடைத்த ரக ர்களால் சரிகட்டுப்பட்டுள்ளனர். இதனையடுத்து லஞ்சம் கொடுத்த 99 பேரும் அந்த மையங்களை தேர்வு செய்து தேர்வு எழுதினர். தேர்வு நாளன்று 99 பேருக்கும் தேர்வு எழுத இரண்டு பேனாக்களை அதிகாரிகள் கொடுத்துள்ளனர். ஒன்று வழக்கமாக பயன்படுத்தும் பேனா. அதன் மூலம் பதிவு எண் மற்றும் பிற விவரங்களை எழுதியுள்ளனர். இன்னொரு பேனா, அழியும் மையால் நிரப்பப்பட்ட பேனா. அந்த பேனா மூலம் விடைகளை விடைத்தாளில் குறித்துள்ளனர். அந்த பேனா மூலம் குறிக்கப்பட்ட பதில் சில மணி நேரத்தில் அழிந்து விடும். தேர்வு முடிந்த பின்னர் , தேர்வர்களின் விடைத்தாளில் சரியான பதில்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இந்த முறைகேட்டில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், டி.என்.பி.எஸ்.சி உயர்அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் மொத்தம் 10 கோடி ரூபாய் வரை கைமாறியுள்ளது.