ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
:உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று தமிழ் புத்தாண்டு தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர். புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல் வாழ்த்துகள். இந்த புனித நாள் அனைவருக்கும், நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும்’ என கூறி உள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி
இதேபோல் தமிழ் புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து வருமாறு:-
தமிழகத்து சகோதர சகோதரிகளுக்கும், உலகெங்கிலும் தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.
More Stories
இடஒதுக்கீட்டு எதிராக மு.க.ஸ்டாலின்..!
அன்புமணி தாக்கு…!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்