தமிழ்நாட்டில் இருந்து டெல்லி ராஜ்யசபைக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்றது. அதிமுக சார்பில் மு.தம்பிதுரை, பாமக சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மனுதாக்கல் செய்தார்கள். இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான சான்றிதழை நாளை (06.03.2026) அன்று பெற்றுக்கொள்வார்கள். அதே போல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவரும் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவிந்திரன் இருவரும் தேமுதிக சார்பில் திமுக கூட்டணியில் எல்.கே.சுதிஷ் மனுதாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் காலியாக இருந்த 6 இடங்களுக்கு 6 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுவதால் அனைவரும் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்களாக தேர்வுசெய்யப்படுவார்கள் என்பது உறுதி.

More Stories
முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது
புதுச்சேரி அமைச்சரவைக்கு இலாகா ஒதுக்கீடு அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்: மாநில முதல்வர்களுடன் ஆலோசனை