அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ததால், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு 424 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்காய்வு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தவறான நிர்வாகத்தால் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், நிதி நிலை மற்றும் நிர்வாக கட்டமைப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்தது, நீண்ட கால ஒப்பந்தங்கள் போடப்பட்டது தான் இந்த குளறுபடிக்கும் காரணம் என மின்துறை அமைச்சர் பேரவையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக சட்டசபையில் தாக்கல் செய்த 2018-ம் ஆண்டு மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜி.எம்.ஆர் மின் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்தது.
அந்த ஒப்பந்தம் 2014 பிப்ரவரி மாதத்துடன் முடிந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. இதனால் 737.40 மி. யூனிட் மின்சாரத்தை, 824.77 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு யூனிட் 12.77 ரூபாய்க்கு பெறப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்ததை நீடிக்கக்கூடாது என தணிக்கையின் போது கூறப்பட்டுள்ளது. அப்போது சந்தை விலையில் யூனிட் 3.39 மற்றும் 5.42 ரூபாய் பெற வேண்டிய மின்சாரத்தை 12 ரூபாய் அளவிற்கு ஜி.எம்.ஆர். மின் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வாங்கி உள்ளதாக தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ததால், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு 424 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்காய்வு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
பொங்கல் பண்டிகை: பஸ் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளது!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு