January 16, 2025

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118- தொகுதிகள் தேவை என்ற நிலையில் 126 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவியேற்க உள்ள திரு. மு.க ஸ்டாலின் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.