தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28-ந் தேதிகளில் தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் என 4 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 4 வண்ணங்களில் ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் தேர்வுக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர்.
மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
இந்த 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடத்தப்படாமல் இருந்ததால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
தமிழக தேர்தல் ஆணையம்
இந்தநிலையில் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், தமிழக தேர்தல் ஆணையத்துக்கு இன்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர்.
அதில், செப்டம்பர் 15-ந் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.
தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடுவது, ஓட்டுப்பதிவு நடத்துவது, வாக்கு எண்ணிக்கையை முடித்து முடிவுகளை அறிவிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செப்டம்பர் 15-ந் திக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உள்ளாட்சி தேர்தல் நடத்த நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. தற்போது மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் இனி கால அவகாசம் வழங்கமுடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினார்கள்.
More Stories
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ் பங்கேற்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு:
மாணவர்களை கைவிடக் கூடாது என்பதற்காக நீட் பயிற்சி