January 21, 2025

தனுஷ் பட போஸ்டர் வெளியீடு.. கொண்டாடும் ரசிகர்கள்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். செல்வராகவன் – தனுஷ் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நானே வருவேன் இந்நிலையில் ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் தனுசின் இரண்டு வித்தியாசமான தோற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ‘நானே வருவேன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.