December 6, 2024

தடுப்பூசி போடுங்கள்! தமிழக மக்களிடம் முதல்வர் வேண்டுகோள்

சென்னை :”கொரோனா தொற்று வேகமாக பரவுவதால், தகுதியுள்ள அனைவரும், தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று, தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்,” என, பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பு உள்ளது’ என்றும், முதல்வர் தன் பேச்சில் தெளிவுபடுத்தி உள்ளார்.கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., – அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது:கடந்தாண்டு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது; நோய் கட்டுப்படுத்தப்பட்டது. இருந்தாலும், இப்போது படிப்படியாக, கொரோனா வைரஸ் பரவல், தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

இதை தடுக்க, நாம் கடுமையாகபணியாற்ற வேண்டும்.இது, ஒருவரிடம் இருந்து, மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடிய தொற்று நோய். இந்நோய் பாதிக்கப்பட்ட பலர், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதையெல்லாம், பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து, அரசு அறிவித்த வழிகாட்டுதல் முறைகளை, தவறாமல் கடைப்பிடித்து செயல்படுத்த வேண்டும்