April 18, 2024

டெல்லி கலவரம்… ரஜினி அதிரடி!

[responsivevoice_button voice=”Tamil Male”]சமீபத்தில் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறி 27 பேர் பலியாகியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் அனுராத் தாகூர் மற்றும் கபில்மிஸ்ரா, பரவேஷ்வர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு டெல்லி உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 50 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. குறிப்பாக சாஹில்பார்க் பகுதியில் சிஏஏ&வுக்கு எதிராகவும் ஆதரவாகவும் போராட்டம் நடத்திய இரு குழுக்களுக்கு இடையே தான் மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்து கல்வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த கலவரத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். பு50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 70க்கு பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதன் பேர் 144 தடை உத்தரவு இந்த பகுதியில் போடப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஆயிரக்கணக்கான போலிசாருக்கு குவிக்கப்பட்டுள்ளனர். கட்சி வேறுபாடின்றி இந்த கலவரத்தை அடக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். காங்கிரஸ் கட்சி கலவரம் குறித்து குடியரசு தலைவரிடம் மனு அளித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவாக அவர் தனது கருத்தை பதிவு செய்கிறார். ஆனால் ஒரு கேள்விக்கு ஒரு பதிலை சொல்லி முடிக்கும் முன்பாகவே பல கேள்விகள் அவரை நோக்கி பாய்கின்றது. இருந்தாலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது தெளிவான பதிலை விளக்கமாக கூறுகிறார். குடியுரிமை சட்ட திருத்தத்தினால் எந்தவித பாதிப்பும் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படாது என்றும் முஸ்லிம்கள் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல் கொடுப்பதில் முதல் ஆளாக நான் நிற்பேன்.

ஆனால் எக்காரணம் கொண்டும் குடியுரிமை திருத்த சட்டத்தை நாடளுமன்ற இருஅவைகளில் நிறைவேற்றப்பட்டப் பின் அதை வாப்பஸ் வாங்க வேண்டும் என்று கூறுவது இச்சட்டத்தை திரும்ப பெறமாட்டார்கள் என்பது எனது கருத்து. சிலர் நான் பாஜகவின் ஆள் என்றும் ஊது குழல் என்றும் கூறுகிறார்கள். அதிலும் சில மூத்த பத்திரிகையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இதை கேட்கும் பொழுது வேதனையாக உள்ளது. “என்ன உண்மையோ அதை நான் சொல்கிறேன்” என்.ஆர்.சி. பற்றி மத்திய அரசு தெளிவாக கூறிவிட்டது. அதில் இன்னும் குழப்பம் ஏன்-? மதத்தின் பெயரை பயன்படுத்தி, மதவாதிகளை பயன்படுத்தி அரசியல் நடத்துவதை யாராக இருந்தாலும் திருத்திக் கொள்ள வேண்டும். அப்படி அரசியல் செய்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

டெல்லியில் நடைபெற்ற சம்பவம் முழுக்க முழுக்க உளவு துறையின் தோல்வியே காரணமாகிறது. அமெரிக்க அதிபர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது இதுபோன்ற சம்பவம் நடந்திருக்க கூடாது. உளவு துறை தனது வேலையை சரியாக செய்யவில்லை. ரஜினிகாந்த்தோடு பிஜேபி இருக்கலாம், ஆனால் ரஜினிகாந்த் பிஜேபியில் இல்லை என்பதை தெளிவாக ஊடக நண்பர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆகவே மதத்தை வைத்து ஆட்சி செய்தாலும் மதத்தினர்களை வைத்து அரசியல் செய்தாலும் தவறு தவறுதான். சில சம்பவங்களை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும். இல்லையென்றால் பிற்காலத்தில் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் அவர்களின் இந்த பேட்டியை பார்க்கும் போது அவர் மிக மிக தெளிவாக அரசியலில் அடியெடுத்து வைக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆனால் ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் ரஜினிகாந்த் அவர்களை குழப்பப் பார்க்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

மதத்தை வைத்து அரசியல் (பாஜக), மதத்தை வைத்து பிஜேபி, மதத்தினர்களை வைத்து (திமுக) அரசியல் நடத்துவராக சொல்லாமல் சொல்லுகிறார் சொல்லுகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என புரிந்துக் கொள்ளமுடிகிறது. இரண்டு தவறு என்பது தான் தெளிவான பதில்.

– சாமி