October 11, 2024

ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் அறிவிப்பு

தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற கூட்டம் ஏற்கனவே நடைபெற்ற இடத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கவர்னர் ஆளுநருடன் ஜனவரி 5-ந் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் கலைவாணர் அரங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது.

தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், தலைமைச் செயலகத்தில் உள்ள வளாகத்தில் ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற இடத்திலேயே கூட்டத் தொடர் நடைபெறும். காகிதம் இல்லாத தொடுதிரை வசதி பயன்படுத்தப்படும்.